100 சவரன் பவுன் நகை, 10 லட்சம்  கார்,  1.5 ஏக்கர் நிலம் கொடுத்தும்  கொடுமை  கேரளத்தை உலுக்கிய இளம்பெண்  மரணம்

by Editor / 26-06-2021 06:42:52pm
100 சவரன் பவுன் நகை, 10 லட்சம்  கார்,  1.5 ஏக்கர் நிலம் கொடுத்தும்  கொடுமை  கேரளத்தை உலுக்கிய இளம்பெண்  மரணம்


 

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த விஸ்மயா என்ற 23 வயது இளம்பெண்  தனது கணவர் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
இவரது மரணம் கொலையா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. விஸ்மயாவின் கணவர் கிரண் குமார் தொடர்ந்து வரதட்சணை கேட்டு அவரை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.கடந்த ஆண்டு மே மாதம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த விஸ்மயாவுக்கும், அதே ஊரைச் சேர்ந்த மோட்டர் வெயிகல் இன்ஸ்பெக்டர் கிரன்குமார் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.வரதட்சனையாக 100 பவுன் நகை, 1.5 ஏக்கர் நிலம், 10 லட்சம் மதிப்புள்ள கார் கொடுத்துள்ளனர்.இவ்வளவு கொடுத்தும் கார் போதுமான மைலேஜ் கொடுக்கவில்லை என்று கூறி தான் அடித்து துன்புறுத்தியுள்ளார் கிரண். 
இந்த வழக்கு தொடர்பாக விஸ்மயாவின் அண்ணன் விஜித் தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில், “பள்ளியில் இருந்தே மிகவும் தைரியமான பெண் விஸ்மயா. அனைவரிடமும் அன்பாக பழகுவாள். 
இப்போது ஆயுர்வேத மருத்துவம் இறுதி தேர்வு எழுத இருந்தாள். ஆனால் அதற்குள் இப்படி நடந்துவிட்டது. அவளது மரணத்துக்கு கிரண் குமார் தான் காரணம்.மேட்ரிமோனியல் தளத்தில் தனக்கு ஏற்ற வரனை விஸ்மயா பார்த்து வந்தார். அப்போது தான் கிரண்குமார் உறவினர் மூலம் தெரிய வர எனது நம்பருக்கு தான் முதலில் போன் வந்தது. கிரண் குமார் தான் பேசினார்.அவருடன் பேசிய பின் விஸ்மயா மகிழ்ச்சியாக இருந்தாள். ஆனால் உறவினர்கள் மூலம் வரதட்சணை கேட்டு அவரது குடும்பத்தினர் தகவல் சொல்லி அனுப்பினர்.விஸ்மயாவுக்கு சேர வேண்டிய சொத்தை கொடுக்க அப்பா முடிவெடுத்தார். அதன்படி தான் 100 சவரன் பவுன் நகை, 10 லட்சம் மதிப்புள்ள கார், 1.5 ஏக்கர் நிலம் வழங்குவதாக கூறினார்..
கிட்டதட்ட 25 ஆண்டுகளாக எனது அப்பா சவுதியில் தான் வேலை பார்த்து வந்தார். இப்போது தான் எங்களுடன் உள்ளார். ஆனால் இனி அவரால் விஸ்மயாவை பார்க்க முடியாது.மிகவும் ஆசையாக இருந்தார் குடும்பத்துடன் நேரம் செலவழிக்க, திருமணம் முடிந்து 8 மாதம் கழித்து ஒருமுறை வீட்டுக்கு வந்த போது தான், தனது கணவர் தன்னை கொடுமை செய்வதாகவும், அடிப்பதாகவும் விஸ்மயா கூறினார்.
அதனைத் தொடர்ந்து கிரண்குமாரிடன் பேசினோம். அப்போது எங்கள் கண்முன்னே என் தங்கையை அடித்தார். போலீஸில் புகார் அளித்தால் குடும்ப கெளரவம் கெட்டுப்போகும் என்று தவறு செய்துவிட்டோம்.
விஸ்மயாவும் உறவினர்கள் என்ன நினைப்பார்கள் என்று நினைத்து கிரண் குமாரை விட்டு வராமல் அங்கேயே இருந்து இப்போது இறந்தும் விட்டார்.” என்று தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via