நுங்கு வண்டி ஒட்டி விளையாடிய புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்

by Editor / 04-12-2022 08:12:33pm
நுங்கு வண்டி ஒட்டி விளையாடிய புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்


தென்காசி மாவட்டம் சுரண்டையில் காமராஜர் அரங்கம் திறப்பு விழா,நாடார் வாலிபர் சங்க 33வது ஆண்டு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பனை மரங்களால் செய்யப்பட்ட நுங்கு வண்டி, பனை பெட்டி, அலங்கார பொருட்கள் உள்ளிட்டவைகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இதனை பார்த்த ஆளுநர் தமிழை செளந்தரராஜன் ஆர்வமுடன் மகிழ்ச்சியடைந்து  குழந்தையாக மாறி நுங்கு வண்டி ஓட்டினார். மேலும் அலங்கார பொருட்களை கண்டு மகிழ்ந்தார். இதனைதொடர்ந்து மேடையில் பேசிய அவர், தங்களின் ஒருவராக இந்த நிகழ்ச்சிக்கு வந்ததாகவும், ஆனால் காவல்துறைக்கு நான் ஆளுநர் என்பதால் கெடு பிடிகள் அதிகமாக இருந்திருக்கலாம்,பொதுமக்கள் மன்னித்து கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.மேலும் காமராஜர் வழியில் வந்ததால்  இந்த இடத்தை பெற்றுள்ளதாகவும் கூடவே  வெற்றிக்கு மூன்று ரகசியம் உள்ளதாகவும் அவை மூன்றும் உழைப்பு, உழைப்பு உழைப்பு தான் எனக்கூறினார். இந்நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.முன்னதாக அவர் பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன்  கலந்துக்கொண்டார்.தென்காசி மாவட்டம் வந்த அவரை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகாஷ் மலர்கொத்துக்கொடுத்து வரவேற்றார்.

நுங்கு வண்டி ஒட்டி விளையாடிய புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்
 

Tags :

Share via