ஜிக்னேஷ் மேவானி வெற்றி

by Staff / 08-12-2022 04:47:46pm
ஜிக்னேஷ் மேவானி வெற்றி

குஜராத் சட்டமன்ற தேர்தலில் வத்கம் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜிக்னேஷ் மேவானி வெற்றி பெற்றுள்ளார். கடந்த முறை சுயேட்சையாக இதே தொகுதியில் வென்ற ஜிக்னேஷ் பின்பு காங்கிரஸில் இணைந்த நிலையில், இந்த முறையும் வெற்றி பெற்றுள்ளார். ஜிக்னேஷ் மேவானி ராஷ்ட்ரிய தலித் அதிகாரி மஞ்ச் என்ற அமைப்பைத் தொடங்கி பட்டியலின மக்களின் நில உரிமை தொடர்பான கோரிக்கைகளுக்குத் தொடர்ந்து குரல் எழுப்பி வந்தது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via