ஐயப்ப பக்தர்களின் வாகனம் மலைச்சாலை பள்ளத்தில் விழுந்து ஏழு பேர் பலி.

by Editor / 24-12-2022 08:25:57am
 ஐயப்ப பக்தர்களின் வாகனம் மலைச்சாலை பள்ளத்தில் விழுந்து  ஏழு பேர் பலி.

தேனி மாவட்டம் குமுளி மலைச்சாலையில் ஐயப்பன் கோவிலுக்கு சென்று விட்டு வந்த ஐயப்ப பக்தர்களின் வாகனம் மலைச்சாலை பள்ளத்தில் விழுந்து விபத்து ஆண்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஏழு பேர் பலி.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியில் சுற்றி உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஏழு பேர் விபத்தில் பலியான சம்பவம் ஆண்டிபட்டி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வியாழக்கிழமை காலையில் ஆண்டிபட்டி பகுதியில் உள்ள கோவிலில் இருந்து பத்து ஐயப்பன் பக்தர்கள் சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசித்து பின் இன்று அதிகாலை சாமி தரிசனம் முடித்து குமுளி வழியாக தேனி அருகே உள்ள ஆண்டிபட்டிக்கு வந்து கொண்டிருந்த போது குமுளி மலைப்பாதையில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் 40 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததில் காரில் இருந்த ஏழு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.

சக்கம்பட்டியைச் சேர்ந்த முனியாண்டி, ஆண்டிபட்டியைச் சேர்ந்த நாகராஜ், மறவபட்டி சேர்ந்த கன்னிச்சாமி,  ஆண்டிபட்டி சேர்ந்த சிவக்குமார்,  எஸ் எஸ் புரத்தை சேர்ந்த வினோத் , இந்த ஐந்து பேரின் உடல்களை உறவினர்கள் அடையாளம் காண்பித்து காவல்துறையினர் உறுதி செய்தனர்.மீதமுள்ள இரண்டு பேர் யாரென்று அடையாளம் காண முடியாமல் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோபாலகிருஷ்ணன் பிச்சம்பட்டி கார் ஓட்டுநர், ஹரிஹர ராஜா நாச்சியார்புரம்  இந்த இருவர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த விபத்து தகவல் அறிந்து தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் முரளிதரன் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சை பெற்று வருபவர்களை நெரிசந்தித்து ஆறுதல் கூறினார்.

 

Tags :

Share via