கோழி முட்டைக்கு கடும் தட்டுப்பாடு.

by Editor / 18-01-2023 10:07:32pm
கோழி முட்டைக்கு கடும் தட்டுப்பாடு.

மகாராஷ்டிராவில் கோழி முட்டைக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தற்போது, மாநிலத்தில் தினமும் 2.25 கோடி முட்டைகள் நுகரப்படும் நிலையில், 1.25 கோடி முட்டைகள் மட்டுமே உற்பத்தியாகிறது. இதனால் தினமும் சுமார் ஒரு கோடி கோழி முட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த தட்டுப்பாட்டை போக்க கர்நாடகா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இருந்து முட்டைகள் இறக்குமதி செய்யப்படுவதாக கால்நடை பராமரிப்புத்துறை ஆணையர் தனுஞ்சய பார்கலே தெரிவித்தார்.

 

Tags :

Share via