முன்னாள் அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் உள்பட 58 பேர் மீது வழக்கு

by Staff / 25-01-2023 02:55:35pm
முன்னாள் அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் உள்பட 58 பேர் மீது வழக்கு

கரூர் மாவட்ட அ. தி. மு. க. எம். ஜி. ஆர். இளைஞர் அணி செயலாளர் என். தானேஷ் என்கிற முத்துக்குமார். இவர் கரூர் மாவட்ட ஊராட்சி துணை தலைவராக பதவி வகித்தார். கடந்த தேர்தலில் கரூர் மாவட்டம் கிருஷ்ண ராயபுரம் தொகுதியில் போட்டியிட்டதால், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் பதவியை ராஜினாமா செய் தார். இதனால் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் பதவி காலியாக இருந்தது. இந்த பதவிக்கான தேர்தல் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது. அப்போது துணைத்தலைவராக போட்டியிட்ட அ. தி. மு. க. வேட்பா ளர் கடத்தப்பட்டார். அவரை விடுவிக்க கோரி அ. தி. மு. க. வினர் ஏராளமானவர்கள் கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர். இதைய டுத்து போராட்டம் நடத்திய முன்னாள் அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர், எம். ஜி. ஆர். இளைஞர் அணி செயலாளர் தானேஷ் என்கிற முத்துக்குமார், கரூர் கிழக்கு ஒன்றிய அ. தி. மு. க. செயலாளர் வக்கீல் மதுசு தன் உள்ளிட்ட 58 பேர் மீது தாந்தோணிமலை போலீ சில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தானேஷ் என்கிற முத்துக்குமார், வக்கீல் மதுசுதன் ஆகிய 2 பேரும், சேலம் டவுன் போலீசில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்று கோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இதையடுத்து 2 பேரும் கடந்த21- ந்தேதி முதல் சேலத்தில் தங்கி கையெழுத்திட்டு வரு கின்றனர். அதன்படி நேற்று இருவரும், சேலம் டவுன் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டனர்.

 

Tags :

Share via