மனைவிக்காக மணமகனின் காதல் பாடல்
பெண்களை கவர ஆண்கள் பல்வேறு வகையில் முயற்சி செய்து வெற்றி காண்கிறார்கள். அந்த வகையில், புதுமணப்பெண்ணை கவரும் வகையில், புது மாப்பிள்ளை ஒருவர் பாடல் பாடி ஆனந்தமழையில் நனைய வைத்துள்ளார். பாகிஸ்தானிய மணமகன் சமி ரஷித் என்பவர் தனது மனைவியின் முன் அமர்ந்து அவருக்காக அமீர்கானின் சந்த் சிஃபாரிஷ் பாடலைப் பாடி அசத்தியுள்ளார். மண விழா மேடையில் நாற்காலியில் அமர்ந்து கிடார் வாசித்துக்கொண்டே பாடிய மணமகனை நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் கூடி கைதட்டி உற்சாகப்படுத்தினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Tags :