காஞ்சி காமாட்சியை காண கோடி கண்கள் வேண்டும்

by Admin / 29-01-2023 10:22:46am
காஞ்சி காமாட்சியை காண கோடி கண்கள் வேண்டும்

உலக மோட்சபுரி என்றும் தபோவனம்,பிரம்மசாலை,சத்யவிரத ஸ்தலம் என அழைக்கும் பெருமை பெற்றதுதான்காஞ்சி காமாட்சி அம்மன் அருள்பாலிக்கும் புண்ணிய தலம்.இத்தலத்தின் சிறப்பே அம்மன் தவ கோலத்தில் இருப்பதுதான்காமாட்சி தாய் பள்ளி கொண்டிருக்கும் இக்கோவிலை திருபுரம்,பத்மநாயகம்,சீவன் முக்திபுரம்,காமகோடிஎனும் திருநாமத்தோடும் அழைக்கப்படுவதுண்டு .நான்கு புறம் கோபுரங்களோடு அகன்ற ,நீண்ட கோட்டை மதிற்சுவரோடுகாட்சியளிக்கும் .இக்கோவிலினுள் 24 தூண்களுடன் காயத்ரீ மண்டபம் சிறப்பு வாய்ந்தது.இதனுள்ளே மூலஸ்தானம்,சாளக்கிராம சக்கர பிரதிஸ்டை சிலை,கர்ப்ப கிரகம்,அர்த்த மண்டபம் ஆகியவை அமைந்துள்ளன.இங்குள்ளது போல்வேறெங்கும் காணக்கிடைக்காத தபசு காமாட்சி,பிலத்வாரம்,ஸ்ரீசக்கரம்,வராகி,பங்காரு காமாட்சி,அரூப லட்சுமிசிறப்பிற்குரியவை.விஸ்வகர்மாவால் சிருஷ்டிக்கப்பட்ட இவ்வாலயத்திலுள்ளகாமாட்சி தேவர்களை காக்கும் பொருட்டுபண்டாசுரனை அழித்து இங்கேயே உறைந்தவள்.காமாட்சி அம்மன் பத்மாசனமிட்டு,முக்கண் கொண்டு கீரிடம் சூட்டிபாசம்,அங்குசம்,கரும்பு வில்,பஞ்சபாணம் ஏந்தி காட்சி தருகிறாள். கிரோதாயுகம்,திரேதாயுகம் ,துவாபர யுகங்களில்
முனிவர்கள் வந்து வழிபட்ட பெருமை பெற்ற கோவில்.இங்குள்ள சக்தி பீடம் 51 சக்தி பீடங்களில் சிறப்பு வாய்ந்தது. பரசுராமர்  ,அகத்தியர்,ஆதிசங்கர ஆச்சாரியாரால் வணங்கப்பெற்ற புனித ஸ்தலம்.அம்மன் ஸ்ரீசக்கரத்தில் சூட்சுமமாக உள்ளாள் என்பது நம்பிக்கை.

காஞ்சி காமாட்சியை காண கோடி கண்கள் வேண்டும்
 

Tags :

Share via