சென்னை உயர்நீதிமன்ற நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட 9 பேர் இன்று பதவியேற்கின்றனர்.

by Editor / 04-06-2022 11:07:37am
சென்னை உயர்நீதிமன்ற நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட 9 பேர் இன்று பதவியேற்கின்றனர்.

2020 ஆம் ஆண்டு மாவட்ட நீதிபதிகளாக  பணியாற்றி வந்த சந்திரசேகரன், சிவஞானம், இளங்கோவன், ஆனந்தி, கண்ணம்மாள், சத்திக்குமார் ,சுகுமார குரூப் ,முரளி சங்கர், மஞ்சுளா, தமிழ் செல்வி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர்.  இதை தொடர்ந்து  இவர்கள் 9 பேரையும் சென்னை உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதிகளாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சமீபத்தில் நியமித்து உத்தரவிட்டார்.இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட 9 பேர் இன்று பதவியேற்கின்றனர். தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
 

 

Tags : Chennai High Court appoints 9 permanent judges today.

Share via