எரிவாயு விலையுயர்வு -எப்போது விடிவு வரப்போகிறது?: கமல்

by Editor / 03-07-2021 08:37:49am
எரிவாயு விலையுயர்வு -எப்போது விடிவு வரப்போகிறது?: கமல்

.தமிழகத்தில், ஜூனில் வீட்டு சிலிண்டர் 825 ரூபாய்க்கு விற்பனையானது. இம்மாதம் அதன் விலை 25.50 ரூபாய் உயர்ந்து, 850.50 ரூபாயாகி உள்ளது. சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து கமல் தனது டுவிட்டர், பேஸ்புக் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: சமையல் எரிவாயு விலையுயர்வு எல்லையைத் தாண்டுகிறது. தனது சாதனையைத் தானே முறியடிக்கிறது. நேரடியாக மக்கள் வயிற்றில் அடிக்கிறோம் எனும் ஓர்மை மத்திய அரசுக்குத் துளியும் இல்லை. எப்போது இதற்கெல்லாம் விடிவு வரப்போகிறது?. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

 

Tags :

Share via