3 பெண்களை திருமணம் செய்த இளைஞர்

by Staff / 17-11-2022 01:34:54pm
3 பெண்களை திருமணம் செய்த இளைஞர்

கோவை மாவட்டம் சூலூர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த வாலிபர், லாரி டிரைவராக பணியாற்றி வந்தார். அவருக்கு உறவுக்கார பெண்ணுடன் 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது, அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர், அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது இந்தநிலையில் ஐதராபாத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணுடன் லாரி டிரைவருக்கு பழக்கம் ஏற்பட்டது. வசதியான அந்த பெண் ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தை பெற்றவர். குடும்பத்தினருடன் தகராறு செய்து விட்டு கோவை வந்தார், இங்கு பெட்ரோல் பங்க்கில் வேலைபார்த்தார் லாரி டிரைவான வாலிபர் பெட்ரோல் பங்க்கிற்கு அடிக்கடி சென்று வந்ததில் அந்த பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. திருமண ஆசை காட்டி அந்த பெண்ணுடன் வாலிபர் தனிக்குடித்தனம் நடத்தினார், திருமணம் செய்யாமலேயே அவர்கள் கணவன்- மனைவி போல் 7 ஆண்டுகளாக வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் பொள்ளாச்சி அருகே ஒரு பெண்ணுடன் வாலிபருக்கு பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண்ணும், வாலிபரின் நண்பரும் காதலித்து வந்துள்ளனர். அந்த பெண் மீது மோகம் கொண்ட வாலிபர், நண்பரை பற்றி தவறாக கூறி அவர்களை பிரித்தார் பின்னர் அந்த பெண்ணுடன் இவர் பழகி காதலிக்கத் தொடங்கினார், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அந்த பெண்ணையும் வாலிபர் திருமணம் செய்து கொண்டார். இப்படி ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் வெவ்வேறு இடங்களில் குடி வைத்து 3 பெண்களுடனும் வாலிபர் உல்லாசமாக வாழ்ந்து வந்தார் சமீபத்தில் 3 பெண்களுக்கும் வாலிபரின் உண்மை நிலவரம் தெரிந்து அதிர்ச்சி அடைந்தனர், 3 பேரும் வாலிபருக்கு நெருக்கடி கொடுத்தனர், எங்களை ஏமாற்றி விட்டாயே என கூறி கண்டித்தனர் இந்தநிலையில் ஐதராபாத் பெண்ணிடம் இருந்து வாலிபர் ரூ. 10 லட்சம் வாங்கி உள்ளார், அந்த பெண்ணின் குடும்ப சொத்தை விற்பனை செய்துள்ளனர், அதில் அந்த பெண்ணுக்கு ரூ. 10 லட்சம் பங்கு கிடைத்துள்ளது. அந்த பணத்தை வாங்கி வாலிபர் ஏமாற்றி விட்டார் தற்போது பணத்தையும், வாழ்க்கையையும் இழந்த ஐதராபாத் பெண் சூலூர் காவல்நிலையத்தில் வந்து புகார் செய்தார். தன்னை ஏமாற்றிய வாலிபரிடம் இருந்து ரூ. 10 லட்சத்தை திருப்பி வாங்கி தர வேண்டும் என கூறி கண்ணீர் வடித்தார் இதையடுத்து விசாரணைக்காக அந்த வாலிபரும், மற்ற 2 மனைவிகளும் அங்கு வந்தனர், அவர்களில் ஐதராபாத்தைச் சேர்ந்த பெண் மட்டும் தனக்கு பணத்தை திருப்பிக் கொடுத்தால் பிரச்சினை செய்யாமல் சென்று விடுகிறேன், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்றார் இதேபோல பொள்ளாச்சி பெண், வாலிபர் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்ற தகவல் எனக்கு இப்போது தான் தெரியவந்தது. முதல் மனைவிக்கு குழந்தை இருப்பதால் அவர்கள் வாழ்க்கை வீணாகி விடக்கூடாது, எனவே நான் பிரிந்து செல்ல தயாராக இருக்கிறேன். அதற்காக அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்றார். முதல் மனைவியோ ஒரு படி மேலே போய் எனது கணவர் நல்லவர் தான். இந்த பெண்கள் தான் அவரை வளைத்து போட்டு உள்ளனர், எனவே என் கணவர் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என்றார் இதுதொடர்பாக வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர், வாலிபர் மீது நடவடிக்கை தேவையில்லை என 3 பெண்களும் கூறுவதால் பணத்தை திருப்பி வாங்கிக் கொடுக்கும் நடவடிக்கையில் போலீசார் இறங்கி உள்ளனர் இந்த சம்பவம் நேற்று சூலூர் காவல் நிலையத்தில் பெரும் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.

 

Tags :

Share via