அதிமுக முடிவுக்கு திருமாவளவன் வரவேற்பு

by Staff / 18-09-2023 05:14:37pm
அதிமுக முடிவுக்கு திருமாவளவன் வரவேற்பு

அதிமுக கூட்டணியில் பாஜக தற்போது இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மேலும், அண்ணாமலை குறித்து இனி அதிமுக தொண்டர்கள் தாறுமாறாக விமர்சிப்போம். அண்ணாமலை கூட்டணி தர்மத்தை மீறி செயல்பட்டு வருகிறார் என அவர் தெரிவித்திருந்தார். இதுகுறித்து பேசிய விசிக தலைவர் திருமாவளவன், பாஜக கூட்டணியை அதிமுக முறித்துக் கொண்டிருப்பது வரவேற்கத்தக்கது. அதிமுக தனித்து போட்டியிட்டால் வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொள்ளும். பாஜகவுடன் தொடர்ந்து பயணித்தால் அதிமுகவின் வாக்கு வங்கி குறைந்து விடும் என்று தெரிவித்தார்.
 

 

Tags :

Share via