எங்கள் கை பூப்பறித்து கொண்டிருக்காது .எங்களுக்கும் கை இருக்கு- அமைச்சர் பி.கே.சேகர் பாபு

by Admin / 01-02-2023 07:09:32pm
எங்கள் கை பூப்பறித்து கொண்டிருக்காது .எங்களுக்கும் கை இருக்கு- அமைச்சர் பி.கே.சேகர் பாபு

முன்னாள் முதல்வர் கலஞைர் நினைவாக கடலில் பேனா சின்னம் 81கோடியில்தமிழக அரசு அமைக்க உள்ளது தொடர்பாகநேற்று
கலைவாணர் கலையரங்கில் சுற்றுச்சசூழல் துறை சார்பாக நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் மீனவர்கள்,சமூக ஆர்வலர்கள்,அரசியல் கட்சியினர் என பலதரப்பினர்  கலந்து கொண்டனர்.இதில் ,பேனா சின்னத்திற்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் இரு அணியினர் .இக்கூட்டத்தில் கலந்து கொண்டநாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்சீமான் பேனா சின்னம் வைத்துப்பார்.நானே ஒரு நாள் சென்று உடைப்பேன் என்று கூட்டமேடையிலே ஆவேசமாக பேசினார்.இது பரபரப்பாக  பேசப்பட்ட  நிலையில் ,இன்று   இந்து அறநிலைய த் துறை  அமைச்சர்  பி.கே.சேகர் பாபு ,  எங்கள் கை பூப்பறித்துக்கொண்டிருக்காது .எங்களுக்கும் கை இருக்குஎன்று   சீமானுக்கு அமைதியான  எச்சரிக்கை  விடுத்தார் .மீனவர் சங்கத்தினர்  இத்திட்டத்திற்கு  ஆதரவு அளித்துள்ளனர்.
 

 

Tags :

Share via