வேலூரில் வரலாறு காணாத மழை

by Editor / 19-08-2019 02:58:04pm
வேலூரில் வரலாறு காணாத மழை

வேலூரில் தொடர்ந்து மூன்றாவது நாளாக தொடர் மழையால் தாழ்வான பகுதிகளில் குளம்போல் தேங்கி நிற்கும் தண்ணீர்.  ஜோலார்பேட்டை அருகே உள்ள ஜலகம்பரை நீர்வீழ்ச்சிவெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது மற்றும் ஆம்பூர், வாணியம்பாடி   தேசிய நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.  கனமழையின் காரணமாக நீர்நிலைகள் அருகில் செல்ல வேண்டாம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது

Share via