முன்னாள் அதிமுக அமைச்சர் பழனியப்பன் திமுகவில் இணைந்தார்

by Editor / 03-07-2021 07:36:00pm
முன்னாள் அதிமுக அமைச்சர் பழனியப்பன் திமுகவில் இணைந்தார்


ஜெயலலிதா ஆட்சியின்போது உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்தவர் பழனியப்பன். இவர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் டிடிவி தினகரன் அணியுடன் செயல்பட்டு வந்ததால் அதிமுகவில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனை அடுத்து அவர் தினகரனின் அமமுகவில் இணைந்து தொடர்ந்து முக்கிய பொறுப்பில் இருந்து வந்தார்.நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் இவர் தோல்வி அடைந்தார்.
 அமமுகமவிலிருந்து வெளியேறி செந்தில் பாலாஜி, பழனியப்பனையும் திமுகவுக்கு அழைத்துச் செல்ல தொடர்ந்து முயற்சிகள் நடந்து வந்துள்ளன. இந்த நிலையில் கடந்த சில தினங்களாகவே பழனியப்பன் அதிமுகவில் இணையப் போவதாக தகவல்கள் கசிந்து வந்தன. இந்த நிலையில்மு. க . ஸ்டாலினை நேரில் சந்தித்து அவர் முன்னிலையில் திமுகவில் இணைந்து கொண்டார்.

 

Tags :

Share via