பாலருவியில் தண்ணீர் வரத்து முற்றிலும் குறைந்துள்ளது சுற்றுலாப் பயணிகள் வரத்தும் வெகுவாக குறைந்துள்ளது

by Staff / 25-02-2023 05:19:22pm
பாலருவியில் தண்ணீர் வரத்து முற்றிலும் குறைந்துள்ளது சுற்றுலாப் பயணிகள் வரத்தும் வெகுவாக குறைந்துள்ளது

தமிழக கேரளா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பாலருவியில் சுமார் 8 லட்சம் ரூபாய் மதிப்பில் தண்ணீர் விழும் தடாகம் சுற்றுலா பயணிகள் நடந்து செல்லும் நடைபாதை உள்ளிட்ட சீரமைக்கும் பணிகள் மும்பரமாக நடைபெற்று வருகிறது கோடை காலம் என்பதால் பாலருவியில் தண்ணீர் வரத்து முற்றிலும் குறைந்துள்ளது சுற்றுலாப் பயணிகள் வரத்தும் வெகுவாக குறைந்துள்ளது


தென்காசி மாவட்டம் மாவட்டத்தில் உள்ள மெயின் அருவி ஐந்தருவி பழைய குற்றாலம் புலியருவி சிற்றருவி உள்ளிட்ட அருவிகள் உள்ளது வருடம் தோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து செல்வார்கள் அதேபோல் தமிழக கேரளா எல்லைப் பகுதியான ஆரியங்காவு பகுதியில் உள்ள பாலருவிக்கும் தமிழகம் மட்டுமல்லாமல் கேரளாவில் இருந்தும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்வது வழக்கம் கடந்த சில தினங்களாக மலைப்பகுதிகளில் கடும் வரட்சி நிலை வருவதால் குற்றால அருவிகளிலும் மற்றும் பாலருவிலும் முற்றிலும் நீர்வரத்து குறைந்துள்ளது தற்போது கோடை காலம் நெருங்கி வருவதால் சுற்றுலா பயணிகள் வருகை என்பதும் வெகுவாக குறைந்துள்ளது இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு இந்த அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது இதனால் சுற்றுலா பயணிகள் நடந்து செல்லும் பாதைகள் தண்ணீர் விழும் தடாகம் உள்ளிட்ட பகுதியில் முற்றிலும் சேதமடைந்துள்ளது தற்போது நீர்வரத்து குறைந்துள்ளதால் கேரளா வனத்துறை சார்பாக தற்போது 8 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு தற்போது அருவி பகுதி முழுவதும் சீரமைக்கும் பணி என்பது மும்பரமாக நடைபெற்று வருகிறது தற்போது தண்ணீர் வரத்து குறைந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் வருகையும் வெகுவாக குறைந்து உள்ளது என்று கேரள வனத்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது

 

Tags :

Share via