ஆப்கானிஸ்தான், பப்புவா நியூ கினியா பகுதிகளில் திடீர் நிலநடுக்கம்,

by Editor / 26-02-2023 10:23:02am
ஆப்கானிஸ்தான், பப்புவா நியூ கினியா பகுதிகளில் திடீர் நிலநடுக்கம்,

ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலையில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 4.3 ரிக்டர் அளவில் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. பைசாபாத்தில் இருந்து கிழக்கே 273 கிலோ மீட்டர் தொலைவில் அதிகாலை 02.14 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 180 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதே போன்று பப்புவா நியூ கினியாவில் நியூ பிரிட்டன் தீவுக்கூட்டம் உள்ளது. நியூ பிரிட்டன் நகரில் இருந்து 38 கி.மீ. தொலைவில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவாகி உள்ளது என அமெரிக்க புவி அறிவியல் ஆய்வு மையம் தெரிவித்தது. ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை.
 

 

Tags :

Share via