விக்டோரியா மன்றத்திற்கு பூட்டு

by Staff / 04-03-2023 05:45:15pm
 விக்டோரியா மன்றத்திற்கு பூட்டு

மதுரை விக்டோரியா எட்வர்ட் மன்ற தனி அலுவலராக நியமிக்கப்பட்ட பத்திரப்பதிவு பதிவாளர் ரவீந்திரநாத் பொறுப்பேற்க வந்தபோது அலுவலகத்திற்கு பூட்டு போட்டு இருந்ததால் அதிர்ச்சி அடைந்தார்.
மதுரை மேல வெளிவீதியில் உள்ள விக்டோரியா எட்வா்ட் மன்ற பொதுச் சேவை அமைப்பு செயல்படுகிறது.
பிரிட்டிஷ் காலத்தில் துவக்கப்பட்ட இம்மன்றத்தில் நூலகம் வணிக வளாகம் உள்ளன இதன் மூலம் பல லட்சம் வருமானம் கிடைக்கிறது. இந்த அமைப்பின் நிர்வாகம் கடந்த 25- ஆண்டுகளாக சிலரின் ஆதிக்கம் உள்ளது.
இதை அடுத்து விக்டோரியா எட்வர்ட் மன்ற மீட்புக் குழு உருவாக்கப்பட்டு தலைவராக ஜெயராமன் செயலாளராக முத்துக்குமரன் செயல்படுகின்றனர்.இந்த மன்ற தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது வழக்கு தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் ஒரு அறிவிப்பை வெளியிட்டார் இச்சங்க நிர்வாகிக்குவோம் சங்கத்திற்கு தேர்தல் நடத்திய புதிய நிர்வாக குழுவை தேர்வு செய்யும் விதமாகவும் தற்போது நிர்வாக குழு கலைக்கப்பட்டு மதுரை வடக்கு மாவட்ட பதிவாளர் ரவீந்திரநாத் மார்ச் 1 முதல் தனி அலுவலராக இருப்பார் அவரை ஓராண்டு காலத்திற்கு இப்பதவிகள் கவர்னர் நியமித்துள்ளார் என தெரிவித்துள்ளார்.அதன்படி பொறுப்பேற்க ரவீந்திரநாத் நேத்து வந்து அலுவலகத்திற்கு வந்தபோது பூட்டு போடப்பட்டிருந்தது விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளதால் நேற்று மாலை வரை விசாரணை நடந்தது.

 

Tags :

Share via