கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சாலை விபத்தில் பலி

by Editor / 06-03-2023 10:06:43pm
கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சாலை விபத்தில் பலி

கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் சிறப்பு உதவி ஆய்வாளர் முத்துராஜ் (53) இன்று காலை தனது இருசக்கர வாகனத்தில் பணிக்காக கிழக்கு காவல் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தபோது கோவில்பட்டி தலைமை தபால் அலுவலகம் அருகே அவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தை பின்னால் வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானதில் சிறப்பு உதவி ஆய்வாளர் முத்துராஜ்   சம்பவ இடத்திலேயே உயிரழந்தார்.

அன்னாரது உடலுக்கு இன்று (06.03.2023) தூத்துக்குடி மாவட்ட காவல் துறை  கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அவரை தொடர்ந்து கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேஷ், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுஜித் ஆனந்த், கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பத்மாவதி உட்பட காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

 

Tags :

Share via