வேளாங்கண்ணியில் இருந்து ஆஸ்திரேலியா நாட்டிற்கு செல்ல முயன்ற இலங்கை அகதிகள் கைது.

by Editor / 08-03-2023 10:54:19am
 வேளாங்கண்ணியில் இருந்து ஆஸ்திரேலியா நாட்டிற்கு செல்ல முயன்ற இலங்கை அகதிகள் கைது.

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் இருந்து இலங்கை அகதிகள் முகாமில் இருந்து கள்ளத்தனமாக சிலர் படகுமூலம் ஆஸ்திரேலியா நாட்டிற்கு செல்ல உள்ளதாக கியூப் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

நாகப்பட்டினம் கியூ பிரிவு குற்றப் புலனாய்வு துறை காவல் துணை கண்காணிப்பாளர் சிவசங்கரன், ஆய்வாளர் இராமச்சந்திரபூபதி ஆகியோர் தலைமையில் போலீசார் தீவிர சோதனை ஈடுபட்டனர்.
அப்போது வேளாங்கண்ணி பேராலயத்துக்கு சொந்தமான விடுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் சிலர் தங்கி இருப்பதாக கிடைத்த ரகசியத்தக்கவலைத்தொடர்ந்து அங்கு தங்கி  இருந்தவர்களைப் பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக தகவல் அளித்ததால் அவர்களது ஆவணங்களை வாங்கி போலீசார் சரிபார்த்தனர்.

அப்பொழுது அவர்கள் தமிழகத்தில் பல்வேறு பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் உள்ளவர்கள் என தெரியவந்தது.ஆறு அகதிகளிடம் நடத்திய விசாரணையில் தூத்துக்குடி மாவட்டம் குளத்துவாய்ப்பட்டி அகதிகள் முகாமை சேர்ந்த கேனுஜன் 34, கிருஷ்ணகிரி மாவட்டம் கெலவர் பள்ளி அகதிகள் முகாமை சேர்ந்த ஜெனிபர்ராஜ் 23, தினேஷ் 18, புவனேஸ்வரி 40, மேலும் இலங்கையில் இருந்து ஆவணங்கள் இன்றி கள்ளத்தனமாக செய்யாறு புதுப்பாக்கம் பகுதியில் தங்கி இருந்த துஷ்யந்தன் 36, வேலூர் மாவட்டம் குடிமல்லூர் அகதிகள் முகாமை சேர்ந்த சதீஸ்வரன் 32 என்பது தெரியவந்தது.

இவர்கள் ஆறு பேரும் ஆஸ்திரேலியாவுக்கு கள்ளத்தனமாக விசைப்படகு மூலம் செல்ல வேளாங்கண்ணியில் தங்கி இருந்ததும் தெரிய வந்தது.மேலும் மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரை சேர்ந்த செல்வம் என்பவரது விசைப்படகில் ஆஸ்திரேலியாவுக்கு செல்ல திட்டமிட்டு விசைப்படகிற்கு கொடுப்பதாக பேசி முடித்த 17 லட்சம் ரூபாய் வைத்துள்ளதாகவும் தகவல் தெரிவித்தனர்.

இதனை அடுத்து ஆறு பேரையும் கைது செய்த க்யூ பிரிவு போலீசார் படகிற்கு கொடுக்க வைத்திருந்த 17 லட்சம் ரூபாயையும் கைப்பற்றினார். தொடர்ந்து அவர்களிடம் வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது

 

Tags :

Share via