புதுச்சேரி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது.

by Editor / 09-03-2023 10:04:54am
 புதுச்சேரி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது.

புதுச்சேரி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்குகிறது. இந்த கூட்டத்தில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. புதுவையில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு வரை மார்ச் மாத இறுதியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. ஆனால் அதன்பின்பு அந்த நடைமுறை மாறியது.

மார்ச் மாதத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு அதன்பின் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க. ஆட்சி அமைந்தது முதல் மார்ச் மாதத்தில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்ய முதல்-அமைச்சர் ரங்கசாமி நடவடிக்கை எடுத்து வந்தார்.

இந்த நிலையில் இன்று புதுச்சேரி சட்டசபை கூடுகிறது. இது பட்ஜெட் கூட்டத்தொடர் என்பதால் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உரையுடன் கூட்டம் தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடர் மார்ச் மாதம் முழுவதும் நடைபெற வாய்ப்பு உள்ளது. இந்த கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது? என்பது தொடர்பாக கூட்டத்தொடர் தொடங்கியதும் அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவு செய்யும். இந்த கூட்டத்தொடரில் மாநில அந்தஸ்து, மின்துறை தனியார் மயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

 

Tags :

Share via