வடசென்னை அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு.

by Staff / 18-03-2023 05:27:50pm
வடசென்னை அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு.

திருவள்ளூர் மாவட்டம் வட சென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு அத்திப்பட்டில் உள்ள வட சென்னை அனல் மின் நிலையத்தில் இரண்டு நிலைகள் உள்ளன இதில் ஐந்து அலகுகளில் மொத்தம் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. முதல் நிலையில் உள்ள மூன்று அலகுகளில் தலா 210 வீதம் என 630 மெகாவாட் மின்சாரமும் இரண்டாவது நிலையில் இரண்டு அலகுகள் செயல்பட்டு வருகிறது தலா 600 மெகாவாட் என 1200 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது இந்த நிலையில் 2ஆம் நிலை 2வது அலகில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 600மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு் உள்ளதாக அனல் மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Tags :

Share via