பானி பூரி ருசித்து சாப்பிட்ட ஜப்பான் பிரதமர்

by Staff / 21-03-2023 03:28:33pm
பானி பூரி ருசித்து சாப்பிட்ட ஜப்பான் பிரதமர்

இந்தியா வந்த ஜப்பான் பிரதமர் பூமியோ கிஷிடா டெல்லியில் புத்த ஜெயந்தி பூங்காவுக்கு சென்று பிரதமர் மோடியுடன் பார்வையிட்டார். இந்நிலையில், பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த ஸ்டாலில் பூமியோ கிஷிடா பானி பூரியை ரசித்து சாப்பிட்டார். மிகவும் ருசியாக இருப்பதாகவும் கூறி கேட்டு வாங்கி சாப்பிட்டார். மேலும், மாம்பழ பன்னா மற்றும் லஸ்ஸியையும் பருகினார். ஜப்பான் வந்த பிரதமருக்கு மோடி டெல்லியில் எளிமையான ட்ரீட் கொடுத்து அசத்தியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

 

Tags :

Share via