மீண்டும் சட்டசபையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆன்லைன் சூதாட்ட எதிர்ப்பு மசோதாவை தாக்கல்  செய்தார்

by Admin / 23-03-2023 12:11:11pm
மீண்டும் சட்டசபையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆன்லைன் சூதாட்ட எதிர்ப்பு மசோதாவை தாக்கல்  செய்தார்

தமிழக சட்டப்பேரவை இன்று காலை 10 மணி அளவில் சபாநாயகர் அப்பாவுதிருக்குறளை வாசித்து சபையை தொடங்கி வைத்ததார் . ,மறைந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.. இசைக்கலைஞர் வாணி ஜெயராமுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கிருஷ்ணகிரியில் காதல் மணம் செய்த இளைஞர் ஜெகன் படுகொலை செய்யப்பட்டதற்கு அரசு விளக்கம் தர வேண்டும் என்கிற கேள்வியோடு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார். அதனைத் தொடர்ந்து ஆன்லைன் சூதாட்ட மசோதாவுக்கு ஆளுநர் அங்கீகாரம் அளிக்காததை அடுத்து மீண்டும் சட்டசபையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆன்லைன்  சூதாட்ட எதிர்ப்பு மசோதாவை தாக்கல்  செய்தார்  இம் மசோதா குறித்து பல்வேறு கட்சியைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் பேசினார்கள். கொங்கு மக்கள் கட்சியை  சேர்ந்த அதன் தலைவர் ஈஸ்வரன் ஆன்லைன் சூதாட்டத்தால் விளையும் தீமைகள் குறித்து பேசினார். அவரைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜபருல்லாக்கா, பா. ஜ .கவை சேர்ந்த நெல்லை சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்ச ர்நயினாா் நகேந்திரன், பாமக சட்டமன்ற குழு தலைவர் ஜி கே மணி காங்கிரசை  கட்சியைச் சார்ந்தசெல்வ பெருந்தகை  ஆகியோர் . தமிழ்நாட்டு இளைஞர்கள் இணைய வழி சூதாட்டத்தின் காரணமாக பொருள் இழப்பு ஏற்படுவதோடு உயிர்  இழப்பையும்  சந்திக்கின்ற  நிலையை  இது  தோற்றுவிக்கிறது என்று அவர்கள்  தங்களுடைய கருத்துக்களை  ஆணித்தரமாக எடுத்து வைத்தார்கள்

 

Tags :

Share via