காசி மேடு மீன் சந்தையில் மீன் விற்பனை களைகட்டியது.  

by Editor / 26-03-2023 10:10:35am
காசி மேடு மீன் சந்தையில் மீன் விற்பனை களைகட்டியது.  

சென்னை காசிமேடு மீன் சந்தையில் ஏராளமான மீன்கள் விற்பனை செய்யப்படும். அனைத்து விதமான மீன்களும் இங்கு கிடைக்கும் என்பதால் அசைவ பிரியர்கள் விடுமுறை நாளான இன்று காசிமேட்டில் குவிந்தனர்.

குறைந்த அளவு மீனவர்கள் விசை படகுகளில் மீன்பிடிக்க சென்ற நிலையில் பெரிய வகை
மீன்கள் வரத்து அதிகம் காணப்பட்டது. அதிகாலை முதலே மீன் விற்பனை களைகட்டி உள்ளது. வஞ்சிரம் மீன் கிலோ ஆயிரம் ரூபாய்க்கு மக்கள் வாங்கி சென்றனர்.

ஞாயிற்றுக் கிழமையான இன்று காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் வரத்தும்
விற்பனையும் அதிகமாக நடைபெற்று வருகிறது. இதனால் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதிகாலை முதலே மீன் வாங்க காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்கு மீன் பிரியர்கள் வந்து தேவையான மீன்களை வாங்கிச் சென்ற வண்ணம் உள்ளனர்.

இதே போன்று சுற்றுவட்டார பகுதிகளில் சில்லறை விலையில் மார்க்கெட் பகுதிகளில் மீன் விற்பனை செய்வதற்காக மீனவ பெண்கள் ஏலமுறையில் மீன்களை வாங்குவதற்காக கூடியிருந்தனர். பெரிய மீன்களான வஞ்சிரம், வவ்வால், ஷீலா, சங்கரா, திருக்கை, சுறா, தோல்பாறை, உள்ளிட்ட மீன்கள் வரத்து அதிகமாக காணப்படுகிறது விலையும் சற்று அதிகமாக காணப்பட்டது.

மீன்களின் விலைப்பட்டியல்
வஞ்சிரம்- கிலோ ரூ:1000 முதல் 1200ரூ:வரையிலும்  
வவ்வால்- கிலோ ரூ:800 முதல் 900 ரூ:வரையிலும்
சங்கரா- கிலோ ரூ:500 முதல் 600ரூ: வரையிலும்
தோல் பாறை- கிலோ ரூ:500 முதல் 600ரூ:
நெத்திலி- கிலோ ரூ:250 முதல் 300ரூ:
வெள்ளை ஊடான்- கிலோ ரூ:250
காரப்பொடி- கிலோ 100 ரூபாய்க்கும்,

 

Tags :

Share via