இன்று விருதுநகரிலிருந்து எடமன் வரை மின்சார ரயில் எஞ்சின் இயக்கி சோதனை.

by Editor / 29-03-2023 08:18:45am
இன்று விருதுநகரிலிருந்து எடமன் வரை மின்சார ரயில் எஞ்சின் இயக்கி சோதனை.

தென்னக ரயில்வே மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட விருதுநகர் முதல் எடமண் வரையிலும் உள்ள அகல ரயில் பாதையில் 2020 ஆம் ஆண்டு மின் ரயில் பாதை அமைக்கும் பணிக்கு ஒப்பந்தங்கள் விடப்பட்டு அதற்கான ஆயத்த பணிகளும் தொடங்கிய நிலையில் கொரொனோ தொற்று காரணமாக மின்சார ரயில் பாதை அமைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இந்த பணிகள் மீண்டும் வேகம் எடுத்ததை தொடர்ந்து விருதுநகர்- ராஜபாளையம்-  கடையநல்லூர்- தென்காசி- பணிகள் நிறைவடைந்த நிலையில் தென்காசி- செங்கோட்டை- பகவதிபுரம் ஆகிய பாதைகளில் மின் மயமாக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. மேலும் கேரள மாநிலம் எட மண் முதல் புனலூர் வரையிலும் அகல ரயில் பாதையில் மின்மயமாக்கும் பணிகள் முடிவடைந்து விட்டன விருதுநகர் முதல் தென்காசி வரை நிறைவு பெற்ற பணிகளை தொடர்ந்து ஏற்கனவே தென்காசி திருநெல்வேலி பாதையில் கடந்த 3ஆம் தேதி அதி வேக சோதனை ரயில் ஓட்டம் நடைபெற்றது.
இதன் தொடர்ச்சியாக 29ஆம் தேதியான இன்று விருதுநகரில் இருந்து பகவதிபுரம்  வரை மின் ரயில் பாதையில் அதிவேக ரயில் இயக்கி சோதனை ஓட்டம் நடைபெறுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. அதற்கான முன்னேற்பாடு பணிகள் மற்றும் இறுதி கட்டப் பணிகள் செங்கோட்டை ரயில் நிலையத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. விருதுநகர் முதல் செங்கோட்டை பகவதிபுரம் வரை 120 கிலோமீட்டர் வேகத்தில் ரயில் இயக்கப்பட்டு சோதனை நடைபெறும் என தென்னக ரயில்வே சார்பில் தெரிவிக்க ப்பட்டுள்ளது.

இன்று விருதுநகரிலிருந்து எடமன் வரை மின்சார ரயில் எஞ்சின் இயக்கி சோதனை.
 

Tags :

Share via