முதல்வருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம்

by Staff / 03-04-2023 11:47:09am
முதல்வருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம்

வயநாடு வந்த கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் நடைபெற்றது. சுமார் 900 போலீசாரின் பாதுகாப்பையும் மீறி முதல்வர் பினராயி விஜயனுக்கு இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் கருப்புக்கொடி காட்டினர். தாளப்புழா பால் கூட்டுறவு சங்கம் அருகே ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு இளைஞர் காங்கிரஸினார் கருப்புக் கொடி காட்டினர். அவர்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டனர். மானந்தவாடி - மைசூர் சாலையில் கருப்புக் கொடி காட்ட முயன்ற காங்கிரஸ் கட்சியினரை போலீஸார் கைது செய்ய முயன்றதால் வாக்குவாதம் ஏற்பட்டது.

 

Tags :

Share via