பிரதமருக்கு எதிராக கருப்பு கொடி காட்டப்படும்

by Staff / 07-04-2023 03:14:48pm
பிரதமருக்கு எதிராக கருப்பு கொடி காட்டப்படும்

சென்னை வரும் பிரதமர் மோடி நாளை அரசுமுறைப்பயணமாக சென்னை வருகை தரவுள்ளார். இந்த நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், பிரதமருக்கு எதிராக கருப்பு கொடி காட்டப்படும் என்று காங்கிரஸ் சட்டமன்றக்குழு தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிப்பை கண்டித்து பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்ட காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. பிரதமர் மோடி செல்லும் அனைத்து இடங்களிலும் கருப்பு கொடி காட்டப்படும். அரசியல் ரீதியாக ராகுலை எதிர்கொள்ள முடியாத பிரதமர் மோடி, இந்திய ஜனநாயகத்தை சிதைத்துவிட்டதாக குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

 

Tags :

Share via