ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்
நம் நாட்டில் தொடர் நிலநடுக்கம் பீதியை உருவாக்கி வருகிறது. பீகார் மற்றும் மேற்கு வங்கத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனிடையே தற்போது, ஜம்மு காஷ்மீரிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக இருந்தது. ஜம்மு காஷ்மீரில் புதன்கிழமை காலை 10.10 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 10 கி.மீட்டர் தொலைவில் இருப்பது கண்டறியப்பட்டது. சேத விவரங்கள் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை.
Tags :