ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தில் மாற்றம்

by Editor / 07-10-2021 10:26:36am
ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தில் மாற்றம்

 ரிசர்வ் வங்கியின் பணக் கொள்கை குழு கூட்டம் நேற்று துவங்கியது. மூன்று நாட்கள் நடைபெறும் இக்கூட்டத்தின் முடிவுகள் நாளை அறிவிக்கப்படும். ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையில், ஆறு உறுப்பினர்களை கொண்ட பணக் கொள்கை கூட்டம் நேற்று துவங்கியது. இதையடுத்து, வட்டியில் மாற்றம் எதுவும் அறிவிக்கப்படுமா அல்லது மாற்றம் எதுவும் இன்றி ஏற்கனவே இருக்கும் நிலையே தொடருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதற்கான விடை நாளை தெரிய வரும். இருப்பினும் பெரும்பாலான நிபுணர்கள், ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்வதற்கான வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளனர்.

உலக அளவில் பொருட்களின் விலை உயர்வு மற்றும் உள்நாட்டில் பணவீக்கத்தை கட்டுப்படுத்த வேண்டிய தேவை ஆகியவற்றின் காரணமாக, ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தில் எந்த மாற்றத்தையும் அறிவிக்க வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளனர்.தற்போது வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான, 'ரெப்போ' வட்டி விகிதம் 4 சதவீதமாக உள்ளது. மேலும், வங்கிகளின் 'டிபாசிட்'டுகளுக்காக ரிசர்வ் வங்கி வழங்கும் 'ரிவர்ஸ் ரெப்போ' வட்டி விகிதம் 3.35 சதவீதம் என்ற அளவில் உள்ளது.

 

Tags :

Share via