காவல்நிலையத்தில் பெண் பிளேடால் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலை முயற்சி-பரப்பரப்பு.  

by Editor / 19-04-2023 11:53:13pm
காவல்நிலையத்தில் பெண் பிளேடால் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலை முயற்சி-பரப்பரப்பு.  

 தென்காசி மாவட்டம் செங்கோட்டை கே சி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி மகன் நவநீதகிருஷ்ணன் இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் ஓட்டுனராக பணியாற்றி வருகின்றார். இவரை இதே பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜாதியைப் பற்றி பேசி கொலை முயற்சி தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக நவநீதகிருஷ்ணன் செங்கோட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்  அடிப்படையில் செங்கோட்டை காவல்துறை ஆய்வாளர் ஷியாம் சுந்தர், ரஞ்சித் மீது தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ரஞ்சித்தை கேரள மாநிலத்தில் வைத்து கைது செய்து இன்று செங்கோட்டை அழைத்து வந்தனர்.இந்த நிலையில் இன்று காலை ரஞ்சித்தை காவல்துறை பிடித்து வந்து விசாரணை நடத்திக் கொண்டிருந்த பொழுது அவரது தாயார் சுப்புலட்சுமி என்பவர் காவல் நிலையத்திற்கு வந்து தனது மகனை  பார்த்துவிட்டு வீடு திரும்பி உள்ளார். பின்னர் மீண்டும் மதியம் தனது மகனை பார்ப்பதற்கு காவல் நிலையம் வந்துள்ளார், காவல் நிலையத்தில் வந்த அவர் காவலர்களிடம் தனது மகன் ஏதும் தப்பு செய்யவில்லை என்று கூறியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக காவல்துறையினர் ஏதோ கூறி அனுப்பவே மனவேதனை அடைந்த சுப்புலட்சுமி காவல் நிலைய வளாகத்தில் படியில் நின்று கொண்டு கையில் வைத்திருந்த பிளேடால்  தனது கழுத்தை அறுத்துக் கொண்டார். இதனை சற்றும் எதிர்பாராத போலீசார் உடனடியாக அவரை செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி அளித்தனர். அங்கு அவருக்கு கழுத்து பகுதியில் 13 தையல்கள் போடப்பட்டுள்ளன, தொடர்ந்து செங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது மேலும் அவருக்கு பாதுகாப்பாக ஒரு பெண் சிறப்பு உதவி ஆய்வாளரையும் பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் செங்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவலர்கள் 2 பேர் இடமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

 

Tags :

Share via