திருவாரூர் திருவிக அரசு கலைக் கல்லூரியில் வகுப்பறையை உடைத்து திருட்டு

by Editor / 27-07-2023 10:59:42am
திருவாரூர் திருவிக அரசு கலைக் கல்லூரியில் வகுப்பறையை உடைத்து திருட்டு

திருவாரூர் அருகே கிடாரம்கொண்டானில் திருவிக அரசு கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரி வளாகத்தில் உள்ள டாக்டர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் கூட்ட அரங்கில் செயல்படும் பிஎஸ்சி கணினி அறிவியல்  வகுப்புகளில் பூட்டை உடைத்து 19 மின்விசிறிகள் திருடப்பட்டுள்ளன.இது குறித்து கல்லூரி முதல்வர் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவாரூர் தாலுகா காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via