18 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்பு

by Editor / 24-04-2023 08:36:36am
 18 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்பு

தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர், மதுரை, கரூர், திருச்சிராப்பள்ளி, நாமக்கல் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
மேலும் விவரங்களுக்கு: mausam.imd.gov.in/chennai இணையதளத்தை காணவும்.என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via