இரவில் திடீரென போலீஸ் ஸ்டேசன் வந்த முதல்வர்

by Editor / 30-09-2021 10:25:45am
இரவில் திடீரென போலீஸ் ஸ்டேசன் வந்த முதல்வர்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திடீரென சர்ப்பைரஸ் விசிட் ஆக தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை காவல் நிலையத்திற்கு வருகை தந்தார். அங்குள்ள காவலர்கள் இதை சற்றும் எதிர்பார்க்காத நிலையில், அவர்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்து ஆச்சர்யம் அளித்தார். இதை பார்த்து காவலர்கள் திகைத்து போனார்கள்.

முதல்வர் ஸ்டாலின் அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் ஆய்வு செய்ததுடன், வழக்குகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து பேசினார். காவல்துறை என்பது உள்துறையின் கீழ் வரும் துறையாகும். முற்றிலும் முதல்வரின் கட்டுப்பாட்டில் வரும் துறை என்பதால் துறை ரீதியாக இந்த ஆய்வு நடந்துள்ளது.

முதல்வர் ஸ்டாலின் கடந்த மே மாதம் தமிழகத்தின் முதல்வராக பதவியேற்றார். பதவியேற்றது முதலே பல்வேறு அதிரடியாக அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். குறிப்பாக காவல்துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தி உள்ளார். காவலர்களுக்கு வார விடுமுறை அளிக்கும் திட்டம், முதல்வராக ஸ்டாலின் ஆன பின்னரே நடைமுறைக்கு வந்துள்ளது.காவல்துறை மானிய கோரிக்கையின் போது பேசிய முதல்வர் ஸ்டாலின், விரைவில் காவல்துறை ஆணையம் அமைக்கப்படும். ஓய்வு பெற்ற காவலர்களுக்கு நலவாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் காவல் நிலையங்களுக்கு வரும் பொதுமக்களை இன்முகத்தோடு வரவேற்று அவர்களின் குறைகளை கனிவோடு கேட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள ஒவ்வொரு காவல் நிலையத்திலும் வரவேற்பார்கள் நியமிக்கப்படுவார்கள் இதற்காக பல ஆண்டுகளாக காத்திருக்கும் மறைந்த காவலர்களின் பாதிப்புகள் ஆயிரத்து 1132 பேர் கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படும் என்று கூறியிருந்தார்.இரண்டாம் நிலை காவலரிலிருந்து முதல்நிலை காவலராகவும் முதல்நிலைக் காவலரிலிருந்து தலைமை காவலரிலிருந்து சிறப்பு உதவி ஆய்வாளராக பதவி உயர்வு உயர்வுக்கான கால வரம்பை ஆய்வு செய்ய ஓர் உயர்மட்டக் குழு அமைக்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார்

காவலர்களுக்கு பல அறிவிப்புகளை வெளியிட்டு அதிரடி காட்டிய ஸ்டாலின், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். அண்மைக்காலங்களில் படுகொலை சம்பவங்கள், கூலிப்படையினரால் நடத்தப்படும் கொலைகளை தடுக்க குற்றவாளிகள் மற்றும் ரவுடிகளை கைது செய்யவும் உத்தரவிட்டார். அதன்படியே ரவுடிகள் தமிழகம் முழுவதும் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். ஆயிரக்கணக்கான ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் காவல்துறையின் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணித்து வரும் நிலையில், அதை மெய்பிக்கும் வகையில், இரவில் திடீரென தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை காவல் நிலையத்திற்கு வருகை வந்தார். முதலமைச்சர் மு க ஸ்டாலின் சேலம் மாவட்டத்தில் தனது ஆய்வு பணியை முடித்துக்கொண்டு தர்மபுரி மாவட்டம் தெற்கு செல்லும் வழியில் திடீரென்று வாகனத்தை நிறுத்தச் சொல்லி வழியில் அமைந்துள்ள B2 அதியமான் கோட்டை காவல் நிலையத்தை ஆய்வு செய்தார். அங்கு பணியிலிருந்த காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் காவலர்களிடம் வழக்குகளின் பதிவேடுகள் பொதுமக்களின் புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்கள். பொதுமக்களின் புகார்கள் மீது விரைவாகவும் நியாயமாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவலர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கினார்.

முதல்வர் ஸ்டாலின்

முன்னதாக முதல்வர் ஸ்டாலின், மருத்துவனை, அரசு அலுவலகங்களிலும் இதேபோல் திடீரென வந்து ஆய்வு செய்துள்ளார். அதே பாணியில் தான் காவல் நிலையத்தை ஆய்வு செய்திருப்பதாக தெரிகிறது.தமிழகம் முழுவதும் அரசு அலுவலங்களுக்கு அடிக்கடி முதல்வர் திடீரென வந்து ஆய்வு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

 

 

Tags :

Share via