போலியாக பதிவு செய்யப்பட்ட 1.80 கோடி மதிப்புள்ள 8.82 ஏக்கர் நிலம் மீட்பு 

by Editor / 24-04-2023 09:31:57pm
போலியாக பதிவு செய்யப்பட்ட 1.80 கோடி மதிப்புள்ள 8.82 ஏக்கர் நிலம் மீட்பு 

 திருநெல்வேலி மாவட்டம், பாணான்குளத்த  சேர்ந்த  சாமுவேல் பென்ராஜ்(48) என்பவருக்கு படலையார்குளம் பகுதியில் ரூ.1 கோடி 2 இலட்சம் மதிப்பில் 1 ஏக்கர் 2 செண்ட் நிலம் உள்ளது. மேற்படி நிலம் போலி ஆவணம் மூலம் வேறோருவர் பெயரில் இருப்பது சாமுவேல் பொன்ராஜிற்கு தெரியவந்தது,இதேபோல்

திருநெல்வேலி மாவட்டம், மூவிருந்தாளி, சாலைபுதூர் கிராமத்தை  சேர்ந்த  மாடத்தி என்ற லெட்சுமி(53) என்பவருக்கு மூவிருந்தாளி பகுதியில் ரூ.78 லட்சம் மதிப்பில் 7 ஏக்கர் 80 செண்ட் நிலம் உள்ளது. மேற்படி நிலம் போலி ஆவணம் மூலம் வேறோருவர் பெயரில் இருப்பது மாடத்திக்கு  தெரியவந்தது,

மேற்படி நிலத்தினை மீட்டுத்தருமாறு இருவரும் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசனிடம் மனு அளித்தன்பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி திருநெல்வேலி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு  பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் ஜெயபால் பர்னபாஸ்க்கு உத்தரவிட்டதன் பேரில் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு  ஆய்வாளர் மீராள்பானு தலைமையிலான உதவி ஆய்வாளர்கள் சாவித்ரி, தனலெட்சுமி மற்றும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு   நிலத்தை மீட்டு அதற்கான ஆவணத்தை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன்.நில உரிமையாளர்கள் சாமுவேல் பொன்ராஜ், மாடத்தி என்ற லெட்சுமி ஆகியோரிடம் இன்று 24.மாவட்ட காவல்துறை  அலுவலகத்தில் வைத்து வழங்கினார்.இவ்வழக்கில் திறம்பட விசாரணை மேற்கொண்டு ரூபாய் 1 கோடி  82 இலட்சம் மதிப்புள்ள 8 ஏக்கர் 82 சென்ட்  நிலத்தை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைக்க காரணமாக இருந்த திருநெல்வேலி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல் துறையினரை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன்.வெகுவாகப் பாராட்டினார்.

போலியாக பதிவு செய்யப்பட்ட 1.80 கோடி மதிப்புள்ள 8.82 ஏக்கர் நிலம் மீட்பு 
 

Tags :

Share via