காங்கிரஸ் தலைமையகத்தில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

by Staff / 13-05-2023 01:30:13pm
காங்கிரஸ் தலைமையகத்தில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் ஏறுமுகத்தை கொண்டாடும் வகையில், டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்தும், கொடிகளை ஏந்தி நடனமாடியும் உற்சாகம் அடைந்துள்ளனர். கர்நாடகாவில் ஏற்படும் ஆட்சி மாற்றம் 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான காங்கிரஸுக்கு புதிய உற்சாகத்தை கொடுத்துள்ளது. இதற்கிடையில், டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் எந்த ஆரவாரமும் இல்லை. பாஜக எதிர்பாராத பின்னடைவை சந்தித்துள்ளது. அதேசமயம், காங்கிரஸ் தற்போது 124 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாஜக 69 இடங்களிலும், ஜேடிஎஸ் 24 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.

 

Tags :

Share via