அரசியல்வாதிகள் முடிவு செய்வதை விட தொழிலாளர்கள் முடிவு செய்ய வேண்டும்-ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி 

by Editor / 25-04-2023 12:01:44am
அரசியல்வாதிகள் முடிவு செய்வதை விட தொழிலாளர்கள் முடிவு செய்ய வேண்டும்-ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி 

திருவாரூரில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி 

எல்லாவற்றிலும் அரசியல் அழுத்தம் இருக்கக் கூடாது.இதை தொழிலாளர்கள்முடிவு செய்ய வேண்டும் அரசியல்வாதிகள் முடிவு செய்யக்கூடாது.
தொழிலாளர்கள் அதிக நேரம் வேலை செய்துவிட்டு பின்னர் ஓய்வெடுத்து விட்டு வேலை செய்யும்போது சக்தி அதிகரிக்கிறது என்பது மருத்துவ ஆராய்ச்சியாக உள்ளது.
இது உலகம் முழுவதும் பின்பற்றப்படுகிறது. ஏதாவது ஒரு விதத்தில் மேன்மை இருக்கிறது என்றால் மாற்றங்களை கொண்டு வர வேண்டும். மாற்றங்களையே கொண்டு வரக்கூடாது என்பது சரியல்ல.

எனவே இதில் அரசியல்வாதிகள் முடிவு செய்வதை விட தொழிலாளர்கள் முடிவு செய்ய வேண்டும். ஆனால் அரசியல் ரீதியாக சில தொழிற்சங்கங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கர்நாடகாவில் இதனை பின்பற்ற ஆரம்பித்து விட்டனர். தமிழக அரசின் இந்த முடிவுக்கு கருத்து சொல்ல எனக்கு உரிமை இல்லை. மருத்துவ ரீதியாக  தொழிலாளர்கள் நலனுக்கு இது ஆரோக்கியமானது என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன என்பதை நான் ஒரு மருத்துவராக கூறிக் கொள்கிறேன்.

பெண்கள் குழந்தைகள் கூடும் இடங்களில் மதுவை தவிர்ப்பது நல்லது. முதல்வர்கள் எவ்வாறு நடந்து கொள்கிறார்களோ அதை வைத்து தான் ஆளுநர்கள் நடந்து கொள்வார்கள் பொதுவாக தெலுங்கானாவில் ஆளுநரை முதல்வர் மதிப்பதில்லை.ஆனால் நான் நேர்மையாகவும் நடுநிலையாகவும் நடந்து கொள்கிறேன். எல்லாம் அரசியல் ஆக்கப்படுவது போல ஆளுநர்களும் அரசியலாக்கப்படுகிறார்கள்.புதுச்சேரியில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளது குறித்து எழுப்பிய கேள்விக்கு அவர் முதல்வராக இருந்த போது எதையும் செய்ய மாட்டார் தற்போது இதனை எல்லாம் செய்ய வேண்டும் என சொல்லுவார் பார்க்கலாம் என தெரிவித்தார்.

 

Tags :

Share via