கமல் 234 படத்தில் கதாநாயகி.........

by Admin / 29-04-2023 07:38:12am
 கமல் 234 படத்தில் கதாநாயகி.........

மணிரத்தினத்தின் இயக்கத்தில் கமலஹாசன் நடிக்கும் கமல் 234 படத்தில் கதாநாயகியாக திரிஷா நடிக்க உள்ளார். பேச்சுவார்த்தை நடக்கிறது என்ற  தகவலும் அதனை தொடர்ந்து நயனதாரா உடன்பேச்சு வார்த்தை நடக்கிறது என்கிற செய்தியும் தொடர்ந்து வந்து கொண்டிருந்த நிலையில், இப்பொழுது கமலஹாசன் உடன் ஜோடியாக இவர்களில் இருவரில் யாரும் இல்லை என்றும் அஜித்தின்  நேர்கொண்ட பார்வையில் நடித்த கதாநாயகியே கமலஹாசனுடன் நாயகியாக நடிக்க உள்ளார். அது குறித்து பேச்சுவார்த்தை நடப்பதாகவும்  தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இதுவும் முழுமையாக உறுதிப்படுத்தப்படாத தகவல். மூன்று பேரில் யார் வேண்டுமானாலும் கதாநாயகியாக நடிக்கலாம்.  கமலஹாசன்  திரிஷாவோடு  ஏற்கனவே இரண்டு படங்களில்  நடித்திருக்கிறார். நயன்தாராவுடன் எந்த படத்தில் நடிக்கவில்லை என்பதால் நயனதாராவுக்கு அதிகமாக வாய்ப்பு இருப்பதாக சொல்லப் படுகிறது.35 ஆண்டுகளுக்குப் பிறகு கமலஹாசனும் மணிரத்தினமும் இணைய இருக்கிறார்கள். இந்த படத்தை  ரெட் ஜெயின் மூவிஸ்  மணிரத்தினத்தின்  மெட்ராஸ்  டாக்கிசும்  இணைந்து  தயாரிக்க உள்ளதாகவும் இப் படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைக்க உள்ளதாகும் இது குறித்த முழு தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

 கமல் 234 படத்தில் கதாநாயகி.........
 

Tags :

Share via