மே மாத ராசிபலன்கள்- 2023.

by Admin / 01-05-2023 02:06:01pm
 மே மாத ராசிபலன்கள்- 2023.

மேஷம் ராசி மே மாத ராசிபலன்கள்- 2023.

சூரியன் ராசி ஸ்தானத்தில் இருப்பதால் பிள்ளைகளின் மூலம் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். மனதில் கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். செவ்வாய் சகோதர ஸ்தானத்தில் இருப்பதால் சகோதரர்களிடம் அனுசரித்து செல்லவும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதன் ராசி ஸ்தானத்தில் இருப்பதால் புதிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் ஒற்றுமை உண்டாகும். சுக்ரன் குடும்ப ஸ்தானத்தில் இருப்பதால் தனவரவுகள் திருப்திகரமாக இருக்கும். சாதுரியமான பேச்சுக்களின் மூலம் எதையும் சமாளிப்பீர்கள். சித்திரை 20ஆம் தேதி முதல் சுக்ரன் சகோதர ஸ்தானத்தில் இருப்பதால் வேலையாட்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். தன, தான்ய விருத்திக்கான சிந்தனைகள் அதிகரிக்கும். குரு போக ஸ்தானத்தில் இருப்பதால் தடைபட்டு வந்த செயல்களை செய்து முடிப்பீர்கள். சித்திரை 09ஆம் தேதி முதல் குரு ராசி ஸ்தானத்தில் இருப்பதால் சுபகாரியங்களை பேசி முடிப்பதற்கான தருணங்கள் சாதகமாக அமையும். சனி லாப ஸ்தானத்தில் இருப்பதால் வியாபாரத்தில் புதிய முயற்சிகள் ஈடேறும். தனவரவுகளின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். ராகு ராசி ஸ்தானத்தில் இருப்பதால் தவறிய சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும். உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக செயல்பட வேண்டும். கேது களத்திர ஸ்தானத்தில் இருப்பதால் கூட்டாளிகளின் வழியில் உதவிகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும்

.ரிஷபம் ராசி-மே  மாத ராசிபலன்கள் -2023..

சூரியன் போக ஸ்தானத்தில் இருப்பதால் வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உறவினர்கள் வழியில் கலகலப்பான சூழ்நிலைகள் ஏற்படும். செவ்வாய் குடும்ப ஸ்தானத்தில் இருப்பதால் பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். தம்பதியர்களுக்கு இடையே சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். புதன் போக ஸ்தானத்தில் இருப்பதால் சிந்தனைகளில் மாற்றங்கள் ஏற்படும். வாக்குறுதிகள் அளிக்கும்போது சிந்தித்து செயல்படுவது நல்லது. சுக்ரன் ராசி ஸ்தானத்தில் இருப்பதால் மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். நண்பர்களிடத்தில் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். சித்திரை 20ஆம் தேதி முதல் சுக்ரன் குடும்ப ஸ்தானத்தில் இருப்பதால் குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். கடன் சார்ந்த பிரச்சனைகளுக்கு உதவிகள் கிடைக்கும். குரு லாப ஸ்தானத்தில் இருப்பதால் மூத்த சகோதரர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். சித்திரை 09ஆம் தேதி முதல் குரு போக ஸ்தானத்தில் இருப்பதால் எதிர்பார்த்த தனவரவுகள் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். வெளியூர் பயணங்களின் மூலம் அனுகூலம் உண்டாகும். சனி தொழில் ஸ்தானத்தில் இருப்பதால் வியாபார பணிகளில் லாபம் அதிகரிக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். ராகு போக ஸ்தானத்தில் இருப்பதால் முன்கோபமின்றி சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். பூர்வீக சொத்துக்களின் மூலம் புதிய வாய்ப்புகள் ஏற்படும். கேது சத்ரு ஸ்தானத்தில் இருப்பதால் புதிய வேலை சார்ந்த முயற்சிகளில் சாதகமான முடிவு கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது விழிப்புணர்வு வேண்டும்.

மிதுனம் ராசி -மே மாத ராசிபலன்கள்- 2023.

சூரியன் லாப ஸ்தானத்தில் இருப்பதால் மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு மேம்படும். சுபகாரியம் சார்ந்த செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் குறையும். செவ்வாய் ராசி ஸ்தானத்தில் இருப்பதால் பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். செயல்பாடுகளில் சுதந்திரத்தன்மை அதிகரிக்கும். புதன் லாப ஸ்தானத்தில் இருப்பதால் கல்வி தொடர்பான பணிகளில் மாற்றங்கள் ஏற்படும். வாகனம் தொடர்பான பயணங்களில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். சுக்ரன் போக ஸ்தானத்தில் இருப்பதால் நீண்ட நாட்களாக இருந்துவந்த சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சித்திரை 20ஆம் தேதி முதல் சுக்ரன் ராசி ஸ்தானத்தில் இருப்பதால் மனதில் ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மேம்படும். குரு தொழில் ஸ்தானத்தில் இருப்பதால் தகவல் தொடர்பு துறைகளில் இருப்பவர்களுக்கு புதுவிதமான அனுபவம் ஏற்படும். சித்திரை 09ஆம் தேதி முதல் குரு லாப ஸ்தானத்தில் இருப்பதால் எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மனதளவில் மாற்றங்கள் ஏற்படும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு வியாபாரத்தின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். சனி பாக்கிய ஸ்தானத்தில் இருப்பதால் நண்பர்களிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் படிப்படியாக குறையும். ராகு லாப ஸ்தானத்தில் இருப்பதால் இணையம் சார்ந்த பணிகளில் உள்ள நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். கேது புத்திர ஸ்தானத்தில் இருப்பதால் குடும்ப பெரியோர்களின் ஆலோசனைகள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும். தனவரவை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் மேம்படும்.


கடகம் ராசி -மே  மாத ராசிபலன்கள் - 2023..

சூரியன் தொழில் ஸ்தானத்தில் இருப்பதால் தனவரவில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு மேம்படும். செவ்வாய் போக ஸ்தானத்தில் இருப்பதால் வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். புதுவிதமான ஆசைகளின் மூலம் விரயங்கள் ஏற்படும். புதன் தொழில் ஸ்தானத்தில் இருப்பதால் பாகப்பிரிவினை தொடர்பான செயல்பாடுகளில் சாதகமான சூழ்நிலைகள் அமையும். எழுத்து சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். சுக்ரன் லாப ஸ்தானத்தில் இருப்பதால் கால்நடை தொடர்பான வியாபாரத்தில் லாபம் மேம்படும். சித்திரை 20ஆம் தேதி முதல் சுக்ரன் போக ஸ்தானத்தில் இருப்பதால் மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். செயல்பாடுகளில் சுதந்திரத்தன்மை அதிகரிக்கும். குரு பாக்கிய ஸ்தானத்தில் இருப்பதால் உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். நெருக்கமானவர்களிடம் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். சித்திரை 09ஆம் தேதி முதல் குரு தொழில் ஸ்தானத்தில் இருப்பதால் வழக்கு தொடர்பான பணிகளில் உள்ள நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள். சனி அஷ்டம ஸ்தானத்தில் இருப்பதால் செய்கின்ற செயல்பாடுகளில் கவனம் வேண்டும். ராகு தொழில் ஸ்தானத்தில் இருப்பதால் உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். கேது சுக ஸ்தானத்தில் இருப்பதால் புதிய முயற்சிகளுக்கு எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். வியாபாரம் நிமிர்த்தமான செயல்பாடுகளில் ஆலோசனைகளை பெற்று முடிவு எடுக்கவும்.

சிம்மம் ராசி - மே மாத ராசிபலன்கள்- 2023.

சூரியன் பாக்கிய ஸ்தானத்தில் இருப்பதால் தொழில் நிமிர்த்தமான அனுபவம் கிடைக்கப் பெறுவீர்கள். அரசு சார்ந்த பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். உயர் அதிகாரிகளின் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். செவ்வாய் லாப ஸ்தானத்தில் இருப்பதால் கல்வி நிமிர்த்தமான வெளியூர் பயணங்கள் சாதகமாக அமையும். வீடு மற்றும் வாகனம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். புதன் பாக்கிய ஸ்தானத்தில் இருப்பதால் குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். சுக்ரன் தொழில் ஸ்தானத்தில் இருப்பதால் திட்டமிட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்களிடம் இருந்துவந்த வருத்தங்கள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். சித்திரை 20ஆம் தேதி முதல் சுக்ரன் லாப ஸ்தானத்தில் இருப்பதால் வெளியூர் தொடர்பான பயணங்களின் மூலம் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். புத்திரர்களின் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். குரு அஷ்டம ஸ்தானத்தில் இருப்பதால் புதுவிதமான பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். சித்திரை 09ஆம் தேதி முதல் குரு பாக்கிய ஸ்தானத்தில் இருப்பதால் நண்பர்களின் ஆலோசனைகள் தொழில் சார்ந்த செயல்பாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்தும். குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். சனி களத்திர ஸ்தானத்தில் இருப்பதால் வாழ்க்கைத் துணைவருடன் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். உத்தியோக மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். ராகு பாக்கிய ஸ்தானத்தில் இருப்பதால் புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். எதிர்பார்த்த சில வாய்ப்புகள் காலதாமதத்திற்கு பின்பு கிடைக்கும். கேது சகோதர ஸ்தானத்தில் இருப்பதால் மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள்.

 


கன்னி ராசி- மே மாத ராசிபலன்கள்- 2023..

சூரியன் அஷ்டம ஸ்தானத்தில் இருப்பதால் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த காரியங்கள் நிறைவேறும். விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்க இயலும். செவ்வாய் தொழில் ஸ்தானத்தில் இருப்பதால் சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் வழியில் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். புதன் அஷ்டம ஸ்தானத்தில் இருப்பதால் எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். சுபகாரியம் தொடர்பான விஷயங்களில் அலைச்சல்கள் உண்டாகும். சுக்ரன் பாக்கிய ஸ்தானத்தில் இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். எதிர்பார்த்த சில காரியங்களில் புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். சித்திரை 20ஆம் தேதி முதல் சுக்ரன் தொழில் ஸ்தானத்தில் இருப்பதால் வியாபாரம் நிமிர்த்தமான செயல்பாடுகள் கைகூடும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி சுதந்திரத்தன்மையுடன் செயல்படுவீர்கள். குரு களத்திர ஸ்தானத்தில் இருப்பதால் வாழ்க்கைத் துணைவரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். சித்திரை 09ஆம் தேதி முதல் குரு அஷ்டம ஸ்தானத்தில் இருப்பதால் சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு புதுவிதமான அனுபவம் உண்டாகும். உயர் பொறுப்பில் இருப்பவர்கள் சக ஊழியர்களிடம் விட்டுக்கொடுத்து செயல்படுவது நல்லது. சனி சத்ரு ஸ்தானத்தில் இருப்பதால் நெருக்கமானவர்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். கடன் சார்ந்த விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். ராகு அஷ்டம ஸ்தானத்தில் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். காப்பீடு சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கேது குடும்ப ஸ்தானத்தில் இருப்பதால் விதண்டாவாத பேச்சுக்களை குறைத்து கொள்ளவும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்.

 


துலாம் ராசி- மே மாத ராசிபலன்கள்- 2023.

சூரியன் களத்திர ஸ்தானத்தில் இருப்பதால் எதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். உடல் தோற்றப்பொலிவு மேம்படும். தவறிய பொருட்களை மீட்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பணிகளில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மேம்படும். செவ்வாய் பாக்கிய ஸ்தானத்தில் இருப்பதால் இறை வழிபாடு சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடு ஏற்படும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். புதன் களத்திர ஸ்தானத்தில் இருப்பதால் பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் கிடைக்கும். வணிகம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். சுக்ரன் அஷ்டம ஸ்தானத்தில் இருப்பதால் இனம்புரியாத குழப்பம் ஏற்பட்டு நீங்கும். நண்பர்களின் வழியில் விவாதங்கள் தோன்றி மறையும். சித்திரை 20ஆம் தேதி முதல் சுக்ரன் பாக்கிய ஸ்தானத்தில் இருப்பதால் எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் கிடைக்கும். தனித்திறமைகளை வளர்த்தி கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். குரு சத்ரு ஸ்தானத்தில் இருப்பதால் எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். சித்திரை 09ஆம் தேதி முதல் குரு களத்திர ஸ்தானத்தில் இருப்பதால் வாழ்க்கைத் துணையுடன் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். மறைமுக எதிர்ப்புகளை அறிந்து வெற்றி கொள்வீர்கள். சனி புத்திர ஸ்தானத்தில் இருப்பதால் மனதில் புதுவிதமான சிந்தனைகள் மேம்படும். கடினமான வேலைகளையும் எளிமையாக செய்து முடிப்பீர்கள். ராகு களத்திர ஸ்தானத்தில் இருப்பதால் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். நண்பர்களின் வழியில் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். கேது ராசி ஸ்தானத்தில் இருப்பதால் மாறுபட்ட அணுகுமுறையின் மூலம் நினைத்ததை நிறைவேற்றி கொள்வீர்கள்.

 


விருச்சிகம் ராசி மே மாத ராசி பலன்கள் 2023

சூரியன் சத்ரு ஸ்தானத்தில் இருப்பதால் மாணவர்களுக்கு கல்வியில் மாற்றமான வாய்ப்புகள் ஏற்படும். தாய்மாமன் வழியில் ஆதரவான சூழல் உண்டாகும். மனதில் உத்தியோகம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். செவ்வாய் அஷ்டம ஸ்தானத்தில் இருப்பதால் பணிபுரியும் இடத்தில் சில அவப்பெயர்கள் ஏற்பட்டு நீங்கும். வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும். புதன் சத்ரு ஸ்தானத்தில் இருப்பதால் பழக்கவழக்கங்களில் மாற்றங்கள் ஏற்படும். எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். சுக்ரன் களத்திர ஸ்தானத்தில் இருப்பதால் உத்தியோக பணிகளில் மதிப்பு அதிகரிக்கும். சகோதரர்களின் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். சுபகாரியம் சார்ந்த பேச்சுவார்த்தைகள் கைகூடும். சித்திரை 20ஆம் தேதி முதல் சுக்ரன் அஷ்டம ஸ்தானத்தில் இருப்பதால் கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். செய்கின்ற செயல்பாடுகளில் ஒருவிதமான ஆர்வமின்மை ஏற்படும். குரு புத்திர ஸ்தானத்தில் இருப்பதால் ஆன்மிகம் சார்ந்த விழாக்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். சித்திரை 09ஆம் தேதி முதல் குரு சத்ரு ஸ்தானத்தில் இருப்பதால் எடுத்து செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். மனதிற்கு பிடித்த புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சனி சுக ஸ்தானத்தில் இருப்பதால் உறவினர்களின் ஆலோசனைகள் தெளிவினை ஏற்படுத்தும். ராகு சத்ரு ஸ்தானத்தில் இருப்பதால் வழக்கு சார்ந்த விஷயங்களை பற்றிய புரிதல் ஏற்படும். மனதிற்கு நெருக்கமானவர்களின் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். கேது போக ஸ்தானத்தில் இருப்பதால் அனைவரிடத்திலும் அனுசரித்து செல்வதன் மூலம் மன அமைதி ஏற்படும். எளிதில் முடிய வேண்டிய பணிகளில் கூட உழைப்புகள் அதிகரிக்கும்.


தனுசு ராசி- மே மாத ராசிபலன்கள் 2023..

சூரியன் புத்திர ஸ்தானத்தில் இருப்பதால் திருப்பணி சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடு ஏற்படும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். மனதளவில் இருந்த சோர்வுகள் நீங்கி துடிப்புடன் செயல்படுவீர்கள்.எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் உண்டாகும். செவ்வாய் களத்திர ஸ்தானத்தில் இருப்பதால் பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். புதன் புத்திர ஸ்தானத்தில் இருப்பதால் பிள்ளைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். பழக்கவழக்கங்களில் மாற்றங்கள் ஏற்படும். சுக்ரன் சத்ரு ஸ்தானத்தில் இருப்பதால் தாய்மாமன் வழியில் ஆதரவான சூழல் உண்டாகும். புதிய வேலை நிமிர்த்தமான செயல்பாடுகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். சித்திரை 20ஆம் தேதி முதல் சுக்ரன் களத்திர ஸ்தானத்தில் இருப்பதால் வர்த்தக பணிகளில் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். குரு சுக ஸ்தானத்தில் இருப்பதால் தாயார் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். உறவினர்களின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். சித்திரை 09ஆம் தேதி முதல் குரு புத்திர ஸ்தானத்தில் இருப்பதால் தாய்மாமன் வழியில் அனுசரித்து செயல்படவும். செயல்பாடுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். சனி சகோதர ஸ்தானத்தில் இருப்பதால் இழுபறியான சில செயல்களுக்கு முக்கிய முடிவினை எடுப்பீர்கள். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். ராகு புத்திர ஸ்தானத்தில் இருப்பதால் கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். கேது லாப ஸ்தானத்தில் இருப்பதால் மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். இணையம் சார்ந்த துறைகளில் ஆர்வம் அதிகரிக்கும்.


மகரம் ராசி மே மாத ராசிபலன்கள் 2023.

சூரியன் சுக ஸ்தானத்தில் இருப்பதால் செயல்பாடுகளின் தன்மைகளை அறிந்து முடிவு எடுக்கவும். உங்களின் பலம் மற்றும் பலவீனத்தை புரிந்து கொள்வீர்கள். நிதானமான செயல்பாடுகள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். செவ்வாய் சத்ரு ஸ்தானத்தில் இருப்பதால் பாதியில் நின்ற பணிகளை செய்து முடிப்பீர்கள். புதன் சுக ஸ்தானத்தில் இருப்பதால் எதிர்பாராத சில அலைச்சல்களின் மூலம் அனுபவம் மேம்படும். கடன்களை அடைப்பதற்கான எண்ணங்கள் உண்டாகும். சுக்ரன் புத்திர ஸ்தானத்தில் இருப்பதால் வர்த்தகம் தொடர்பான வியாபாரத்தில் உள்ள சில சூட்சுமங்களை கற்று கொள்வீர்கள். உணர்ச்சிபூர்வமாக செயல்படுவதை குறைத்து கொள்வது நல்லது. சித்திரை 20ஆம் தேதி முதல் சுக்ரன் சத்ரு ஸ்தானத்தில் இருப்பதால் நண்பர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குரு சகோதர ஸ்தானத்தில் இருப்பதால் கலை சார்ந்த துறைகளில் ஈடுபாடு ஏற்படும். மனதில் நம்பிக்கையுடன் முக்கிய முடிவினை எடுப்பீர்கள். சித்திரை 09ஆம் தேதி முதல் குரு சுக ஸ்தானத்தில் இருப்பதால் தாய்வழி உறவினர்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். இயற்கை மருத்துவம் சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். சனி குடும்ப ஸ்தானத்தில் இருப்பதால் குடும்பத்தில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தனவரவில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். ராகு சுக ஸ்தானத்தில் இருப்பதால் புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். பழைய நினைவுகளின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். கேது தொழில் ஸ்தானத்தில் இருப்பதால் செய்கின்ற செயல்பாடுகளில் துரிதம் ஏற்படும். எதிலும் கட்டுப்பாட்டுடன் செயல்படுவது சார்ந்த எண்ணங்கள் மேம்படும்.


கும்பம் ராசி மே மாத ராசிபலன்கள்- 2023.

சூரியன் சகோதர ஸ்தானத்தில் இருப்பதால் கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். வியாபாரத்தில் விற்பனையை மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். செவ்வாய் புத்திர ஸ்தானத்தில் இருப்பதால் கலைகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். ரசனையில் புதுவிதமான மாற்றம் உண்டாகும். புதன் சகோதர ஸ்தானத்தில் இருப்பதால் புதிய தொழில்நுட்ப கருவிகளை வாங்கும் முயற்சிகள் கைகூடும். இழுபறியான பாகப்பிரிவினைகள் கைகூடும். சுக்ரன் சுக ஸ்தானத்தில் இருப்பதால் வழக்கு தொடர்பான பணிகளில் சாதகமான முடிவு கிடைக்கும். அதிரடியான சில செயல்களின் மூலம் போட்டிகளை சமாளிப்பீர்கள். சித்திரை 20ஆம் தேதி முதல் சுக்ரன் புத்திர ஸ்தானத்தில் இருப்பதால் கல்வி பணிகளில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். கடினமான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். கற்பனை கலந்த உணர்வுகளின் மூலம் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். குரு குடும்ப ஸ்தானத்தில் இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். கணிதம் சார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். சித்திரை 09ஆம் தேதி முதல் குரு ராசி ஸ்தானத்தில் இருப்பதால் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் அமையும். விரும்பிய உணவினை உண்டு மகிழ்வீர்கள். சனி ராசி ஸ்தானத்தில் இருப்பதால் இனம்புரியாத சில கனவுகளின் மூலம் அமைதியின்மை உண்டாகும். உங்களின் பலம் மற்றும் பலவீனத்தை பற்றி புரிந்து கொள்வீர்கள். ராகு சகோதர ஸ்தானத்தில் இருப்பதால் மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். அரசு சார்ந்த ஆவணங்கள் கையாளும் பொழுது கவனம் வேண்டும். கேது பாக்கிய ஸ்தானத்தில் இருப்பதால் மனதில் நேர்மறை சிந்தனைகள் மேம்படும். இயந்திர பணிகளில் கவனத்துடன் செயல்படவும்.

மீனம் ராசி மே மாத ராசிபலன்கள் 2023.

சூரியன் குடும்ப ஸ்தானத்தில் இருப்பதால் உழைப்புக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். தனவரவு திருப்தியாக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் சாதகமாகும். எதிர்பாராத சில திடீர் திருப்பங்கள் உண்டாகும். மனதை உறுத்திய சில விஷயங்கள் விலகும். செவ்வாய் சுக ஸ்தானத்தில் இருப்பதால் புதிய வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் கைகூடும். மாணவர்களுக்கு நினைவாற்றல் மேம்படும். புதன் குடும்ப ஸ்தானத்தில் இருப்பதால் உறவினர்களின் மத்தியில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். புதுவிதமான ஆடைகள் மீது ஆர்வம் உண்டாகும். சுக்ரன் சகோதர ஸ்தானத்தில் இருப்பதால் பணிபுரியும் இடத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வதற்கான தருணங்கள் உண்டாகும். சித்திரை 20ஆம் தேதி முதல் சுக்ரன் சுக ஸ்தானத்தில் இருப்பதால் உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பான சூழல் உண்டாகும். விவசாய பொருட்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். சுபகாரியம் சார்ந்த செயல்பாடுகளில் விவேகத்துடன் செயல்படவும். குரு ராசி ஸ்தானத்தில் இருப்பதால் மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி அமைதி உண்டாகும். எதிர்பாராத சில பணிகளால் உழைப்பும், அலைச்சலும் ஏற்படும். சித்திரை 09ஆம் தேதி முதல் குரு குடும்ப ஸ்தானத்தில் இருப்பதால் முகத்தில் புதுப்பொலிவுடன் காணப்படுவீர்கள். கோப உணர்வுகளை கட்டுப்படுத்தி கொள்வது நல்லது. சனி போக ஸ்தானத்தில் இருப்பதால் குடும்ப உறுப்பினர்களிடத்தில் பொறுமையுடன் செயல்படவும். பொருளாதார விஷயங்களை பகிராமல் இருக்கவும். ராகு குடும்ப ஸ்தானத்தில் இருப்பதால் கூட்டாளிகளிடம் அனுசரித்து செல்வதன் மூலம் தேவையற்ற பகைமையை தவிர்க்க முடியும். வாக்கு சாதுரியத்தின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். கேது அஷ்டம ஸ்தானத்தில் இருப்பதால் எதிலும் பொறுமையுடன் செயல்படுவது மேன்மையை ஏற்படுத்தும். கற்பித்தல் பணிகளில் சில மாற்றமான சூழல் அமையும்

 

Tags :

Share via