மாணவி நந்தினிக்கு தங்க பேனா பரிசளித்த கவிஞர் வைரமுத்து

by Staff / 11-05-2023 02:55:14pm
 மாணவி நந்தினிக்கு தங்க பேனா  பரிசளித்த கவிஞர் வைரமுத்து

பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில் 600க்கு 600 மதிப்பெண் பெற்று சாதனை படைத்த மாணவி நந்தினியை சந்தித்து கவிஞர் வைரமுத்து தங்க பேனா பரிசளித்தார். மாணவியின் இந்த சாதனையை தொடர்ந்து பல பிரபலங்களும், கட்சி தலைவர்களும் வாழ்த்தி வந்தனர். சமீபத்தில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் மாணவி நந்தினியை நேரில் சந்தித்து  வாழ்த்தினார். மேலும்  மாணவி நந்தினியின்  உயர்கல்விக்கு உதவுவதாக கூறியிருந்தார்.   இந்நிலையில் இன்று கவிஞர் வைரமுத்து மாணவி நந்தினியை நேரில் சந்தித்து வாழ்த்து கூறி தங்க பேனாவை பரிசளித்தார்.

 

Tags :

Share via