காரில் எரிசாராய மூட்டைகளை கடத்தியவா் கைது

by Staff / 13-05-2023 04:05:36pm
காரில் எரிசாராய மூட்டைகளை கடத்தியவா் கைது

திண்டிவனம் அருகே எரி சாராயம் கடத்தி வந்தவரை மத்திய துண்ணறிவுப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை நள்ளிரவு கைது செய்தனா். புதுச்சேரி மாநிலத்திலிருந்து சாராயம் கடத்தப்படுவதாக மத்திய நுண்ணறிவுப் பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மத்திய நுண்ணறிவுப் பிரிவு காவல் ஆய்வாளா் சின்ன காமன்னன், உதவி ஆய்வாளா் இனாயத்பாஷா, தலைமைக் காவலா் மகா மாா்க்ஸ் ஆகியோா் தலைமையிலான போலீஸாா், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த கூட்டேரிப்பட்டு சந்திப்பில் வியாழக்கிழமை நள்ளிரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அதிவேகமாக வந்த காரை நிறுத்தி போலீஸாா் சோதனை செய்தனா். அப்போது அதிலிருந்த நபா் தப்பியோட முயன்றாா்.சுதாரித்துக் கொண்ட போலீஸா ா் அவரை மடக்கிப் பிடித்தனா். காரை சோதனை செய்ததில் 150 லிட்டா் விஷ நெடியுடன் கூடிய எரி சாராயம் மற்றும் சாராய பாக்கெட்டுகள் இருந்ததைகண்டறிந்தனா். இதையடுத்து திண்டிவனம் மது விலக்கு அமல்பிரிவு காவல் துறையினரிடம் அவற்றை ஒப்படைத்தனா். திண்டிவனம் மது விலக்கு அமல்பிரிவு போலீஸாா் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து, புதுச்சேரி காட்டேரிக்குப்பத்தைச் சோந்த செ. கவிநீலவனைக் கைது செய்தனா். 300 எரிசாராயப் புட்டிகள், 300 சாராய பாக்கெட்டுகள், 25 லிட்டா் கொள்ளளவு கொண்ட 6 சாராய பாலித்தீன் மூட்டைகள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்திய காா் ஆகியவற்றையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

 

Tags :

Share via