விடாமுயற்சி படம் படப்பிடிப்பு தொடங்குவதில் காலதாமதம் ஏன் ..?

by Admin / 21-05-2023 03:27:58pm
விடாமுயற்சி படம் படப்பிடிப்பு தொடங்குவதில் காலதாமதம் ஏன் ..?

அஜித்தின் நடிப்பில் துணிவு படம் வெளியாகி வெற்றி பெற்றதை அடுத்து அவரது அடுத்த படமான ஏகே 62 விரைவில் ஆரம்பிக்கும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமாக படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை நீக்கினார்கள். அதனை ,அடுத்து படம் யாரால் இயக்கப்படும். எப்பொழுது ஆரம்பிப்பார்கள் என்கிற குழப்பம் இரண்டு மூன்று மாதங்களாக தொடர்ந்து நீண்டு கொண்டிருந்தது .இந்நிலையில் ,மகிழ் திருமேனி 62 ஆவது படத்தை இயக்க இருப்பதாக அறிவிப்பு வந்தது அதுவும் இழுபறியாகிக் கொண்டிருந்த நிலையில் விடா முயற்சி என்று பெயர் சூட்டப்பட்டது. இந்நிலையில் தான் அஜித்தின்  அப்பா மரணம் ,வெளி மாநிலங்களில் பைக் ரேஸ் என்று அஜித்தின்  பொழுதுகள் ஓடிக் கொண்டிருக்கிற நிலையில், விடாமுயற்சி படம் தொடர்ந்து சிக்கலுக்கு மேல் சிக்கலாகி கொண்டிருக்கிறது.. தற்பொழுது லைக்கா நிறுவனம் அமலாக்க துறையால் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு படப்பிடிப்பு தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டு இருப்பதாக தகவல்.. ஒரே நேரத்தில் விஜய்யின் வாரிசும் அஜித்தின் துணிச்சலும் வெளியாகி ரசிகர்களுடைய வரவேற்பை பெற்றதோடு ,கோடிகளையும் குவித்தது இந்நிலையில் அஜித் விஜய்னுடைய படங்கள் படப்பிடிப்பு நடக்க உள்ளதாக தகவல்கள் வந்த நிலையில் விஜய்னுடைய லியோ படம் லோகேஷ் கனகராஜால் .. காஷ்மீரில் இருந்து சென்னை வரைக்கும் தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், இதுவரை அஜித் தன்னுடைய விடா முயற்சி படம் படப்பிடிப்பை தொடங்கவில்லை. இது அவருடைய ரசிகர்களை மிகுந்த மன வருத்தத்திற்கு உள்ளாகியுள்ளது.

 இழுபறி

 

Tags :

Share via