-இன்றைய ராசி பலன்கள்-22-05-2023

by Admin / 21-05-2023 11:45:36pm
-இன்றைய ராசி பலன்கள்-22-05-2023

மேஷம்

மே 22, 2023

 

 

 

புதிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். திட்டமிட்ட பணிகளில் எண்ணிய முடிவு கிடைக்கும். மறைமுகமான  எதிர்ப்புகள் விலகும். புதிய பொருட்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் மேம்படும். குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். சாந்தம் வேண்டிய நாள்.

 

 

அதிர்ஷ்ட திசை : மேற்கு

 

அதிர்ஷ்ட எண் : 8

 

அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்

 

 

அஸ்வினி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

 

பரணி : எண்ணங்கள் ஈடேறும். 

 

கிருத்திகை : முன்னேற்றம் ஏற்படும். 

---------------------------------------

 

 

 

ரிஷபம்

மே 22, 2023

 

 

 

மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பிறமொழி பேசும் மக்களின் அறிமுகம் உண்டாகும். செயல்பாடுகளில் சுதந்திர தன்மை மேம்படும். உங்களை பற்றிய கண்ணோட்டத்தில் மாற்றம் ஏற்படும். எதிர்பாராத சில வரவுகளின் மூலம் கையிருப்புகள் அதிகரிக்கும். மனதில் தோன்றும் எண்ணங்களை வெளிப்படுத்துவீர்கள். பழக்கவழக்கங்களில் சில புதுமைகள் வெளிப்படும். மேன்மை நிறைந்த நாள்.

 

 

அதிர்ஷ்ட திசை : மேற்கு

 

அதிர்ஷ்ட எண் : 6

 

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

 

 

கிருத்திகை : அறிமுகம் உண்டாகும்.

 

ரோகிணி : மாற்றம் ஏற்படும். 

 

மிருகசீரிஷம் : புதுமையான நாள்.

---------------------------------------

 

 

 

மிதுனம்

மே 22, 2023

 

 

 

வாக்குறுதிகள் அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். மாணவர்களுக்கு கல்வி பணிகளில் ஈடுபாடு உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதிற்கு நெருக்கமானவர்களின் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். சுபகாரியங்கள் தொடர்பான பயணங்கள் மற்றும் அதை சார்ந்த முயற்சிகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். விவேகம் வேண்டிய நாள்.

 

 

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

 

அதிர்ஷ்ட எண் : 9

 

அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு

 

 

மிருகசீரிஷம் : சிந்தித்து செயல்படவும். 

 

திருவாதிரை : ஒத்துழைப்பு கிடைக்கும்.

 

புனர்பூசம் : அலைச்சல்கள் உண்டாகும்.

---------------------------------------

 

 

 

 

கடகம்

மே 22, 2023

 

 

 

எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். உத்தியோகத்தில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். தொழில் ரீதியான பயணங்களின் மூலம் நன்மை ஏற்படும். பயணங்கள் தொடர்பான விஷயங்களில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். மனதை உறுத்திய சில விஷயங்களுக்கு தெளிவான முடிவு கிடைக்கும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் மேம்படும். போட்டிகள் நிறைந்த நாள்.

 

 

அதிர்ஷ்ட திசை : கிழக்கு 

 

அதிர்ஷ்ட எண் : 3

 

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை

 

 

புனர்பூசம் : நெருக்கடிகள் உண்டாகும். 

 

பூசம் : முடிவு கிடைக்கும். 

 

ஆயில்யம் : புரிதல் மேம்படும். 

---------------------------------------

 

 

 

சிம்மம்

மே 22, 2023

 

 

 

உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். வாழ்க்கைத் துணைவருடன் செல்லும் சிறு தூரப் பயணங்களின் மூலம் மாற்றம் ஏற்படும். தனவரவுகளின் மூலம் சேமிப்பு மேம்படும். ஆன்மிகம் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும்.வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சாதனை நிறைந்த நாள்.

 

 

அதிர்ஷ்ட திசை : வடக்கு

 

அதிர்ஷ்ட எண் : 7

 

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம் 

 

 

மகம் : இன்னல்கள் குறையும். 

 

பூரம் : மாற்றம் ஏற்படும். 

 

உத்திரம் : எண்ணங்கள் மேம்படும்.

---------------------------------------

 

 

 

கன்னி

மே 22, 2023

 

 

 

வியாபார பணிகளில்  சிறு சிறு மாறுதல்களின் மூலம் லாபம் அதிகரிக்கும். அரசு தொடர்பான பணிகள் சாதகமாக நிறைவு பெறும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் விவேகத்துடன் செயல்படவும். கௌரவ பொறுப்புகளின் மூலம் செல்வாக்கு மேம்படும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். செலவுகளின் தன்மைகளை அறிந்து செயல்படவும். தேர்ச்சி நிறைந்த நாள்.

 

 

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

 

அதிர்ஷ்ட எண் : 6

 

அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்

 

 

உத்திரம் : லாபம் அதிகரிக்கும்.

 

அஸ்தம் : விவேகத்துடன் செயல்படவும்.

 

சித்திரை : வாய்ப்புகள் கிடைக்கும். 

---------------------------------------

 

 

 

துலாம்

மே 22, 2023

 

 

 

வெளிவட்டாரங்களில் மதிப்பு அதிகரிக்கும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். உத்தியோகத்தில் உங்கள் முயற்சிக்கேற்ப அங்கீகாரம் கிடைக்கும். மனதில் ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மேம்படும். வாழ்க்கைத் துணைவரின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். காணாமல் போன சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும். உயர் பொறுப்புகளில் இருப்பவர்களின் சந்திப்பு உண்டாகும். ஊக்கம் நிறைந்த நாள். 

 

 

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 

 

அதிர்ஷ்ட எண் : 8

 

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

 

 

சித்திரை : மதிப்பு அதிகரிக்கும். 

 

சுவாதி : சிந்தனைகள் மேம்படும்.

 

விசாகம் : சந்திப்பு உண்டாகும். 

---------------------------------------

 

 

 

 

விருச்சிகம்

மே 22, 2023

 

 

 

புதிய முதலீடு சார்ந்த விஷயங்களில் விவேகம் வேண்டும். உத்தியோக பணிகளில் பொறுமை வேண்டும். எந்த ஒரு செயலையும் சிந்தித்து செயல்படவும். குழந்தைகள் வழியில் சிறு சஞ்சலங்களும், வாக்குவாதங்களும் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மனதளவில் மாற்றம் ஏற்படும். கால்நடை சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். மக்கள் தொடர்பு துறைகளில் இருப்பவர்களுக்கு புதுவிதமான அனுபவம் உண்டாகும். பொறுமை வேண்டிய நாள்.

 

 

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

 

அதிர்ஷ்ட எண் : 3

 

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

 

 

விசாகம் : விவேகம் வேண்டும்.

 

அனுஷம் : மாற்றம் ஏற்படும்.

 

கேட்டை : அனுபவம் உண்டாகும்.

---------------------------------------

 

 

 

தனுசு

மே 22, 2023

 

 

 

கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல் உண்டாகும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். உடன்பிறந்தவர்களின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். புதுவிதமான லட்சியங்களை உருவாக்குவீர்கள். உத்தியோக பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.  

 

 

அதிர்ஷ்ட திசை : தெற்கு

 

அதிர்ஷ்ட எண் : 4

 

அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்

 

 

மூலம் : நெருக்கம் அதிகரிக்கும்.

 

பூராடம் : மகிழ்ச்சி உண்டாகும்.

 

உத்திராடம் : சாதகமான நாள்.

---------------------------------------

 

 

 

மகரம்

மே 22, 2023

 

 

 

எதிர்பாராத தனவரவுகளின் மூலம் பொருட்சேர்க்கை உண்டாகும். நெருக்கமானவர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறையும். உத்தியோக பணிகளில் திறமைகள் வெளிப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவதற்கான வாய்ப்புகள் அமையும். ஆர்வம் நிறைந்த நாள்.

 

 

அதிர்ஷ்ட திசை : வடக்கு 

 

அதிர்ஷ்ட எண் : 7

 

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

 

 

உத்திராடம் : பொருட்சேர்க்கை உண்டாகும். 

 

திருவோணம் : திறமைகள் வெளிப்படும். 

 

அவிட்டம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

---------------------------------------

 

 

 

கும்பம்

மே 22, 2023

 

 

 

புதிய முயற்சிகளுக்கு எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். பாகப்பிரிவினை தொடர்பான செயல்பாடுகளில் சாதகமான சூழ்நிலைகள் அமையும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உடன்பிறப்புகள் ஆதரவாக செயல்படுவார்கள். உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும்.  பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். ஆதரவு  நிறைந்த நாள்.

 

 

அதிர்ஷ்ட திசை : தெற்கு

 

அதிர்ஷ்ட எண் : 8

 

அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்

 

 

அவிட்டம் : முடிவு கிடைக்கும். 

 

சதயம் : ஆதரவான நாள்.

 

பூரட்டாதி : அனுசரித்து செல்லவும். 

---------------------------------------

 

 

 

மீனம்

மே 22, 2023

 

 

 

குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். வியாபார பணிகளில் ஏற்பட்ட மந்தத்தன்மை குறையும். மனதில் இருந்துவந்த கருத்துகளை வெளிப்படுத்துவதன் மூலம் நிம்மதி ஏற்படும். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டாகும். கல்வி தொடர்பான பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். கடன் தொடர்பான பிரச்சனைகள் படிப்படியாக குறையும். வழக்கு தொடர்பான பணிகளில் நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள். பாராட்டுகள் நிறைந்த நாள்.

 

 

அதிர்ஷ்ட திசை : மேற்கு

 

அதிர்ஷ்ட எண் : 6

 

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

 

 

பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.

 

உத்திரட்டாதி : அனுகூலம் உண்டாகும். 

 

ரேவதி : நுணுக்கங்களை அறிவீர்கள்.

 

 

Tags :

Share via