நாடாளுமன்ற திறப்பு விழாவை அரசியலாக்க கூடாது- அமித்ஷா

by Staff / 24-05-2023 03:52:37pm
நாடாளுமன்ற திறப்பு விழாவை அரசியலாக்க கூடாது- அமித்ஷா

புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை அரசியலாக்க வேண்டாம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாத் தெரிவிதுள்ளார். இந்த விவகாரத்தை நாம் அரசியலாக்கக் கூடாது. மக்கள் எப்படி வேண்டுமானாலும் சிந்தித்து எதிர்வினையாற்றட்டும் என்று அமித்ஷா செய்தியாளர் சந்திப்பில் கூறினார். இந்த நிகழ்வை 19 எதிர்க்கட்சிகள் புறக்கணித்துள்ள நிலையில் அமித்ஷா பதில் அளித்துள்ளார். குடியரசுத் தலைவருக்குப் பதிலாக பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பார் என அறிவிக்கப்பட்டதற்கு, எதிர்ப்புத் தெரிவித்து எதிர்க்கட்சிகள் நிகழ்ச்சியைப் புறக்கணிக்கின்றன. வரும் 28ஆம் தேதி நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா நடைபெறவுள்ளது.

 

Tags :

Share via