ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் நபருக்கு ஆயுள் தண்டனை

by Admin / 30-05-2023 07:49:53pm
ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும்   நபருக்கு ஆயுள் தண்டனை

நேற்று உகாண்டா ஜனாதிபதி   யோவேரிமுசெவெனிஓரினச் சேர்க்கைக்கு எதிரான சட்டத்தில் கையெழுத்திட்டார்.. இச்சட்டத்தின் மூலம் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் எவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கும் மிகக் கடினமான ஒரு சட்டத்தை உகாண்டா நிறைவேற்றி உள்ளது .பல்வேறு மேற்கத்திய நாடுகள் மனித உரிமைச் சங்கங்கள் எழுப்பிய கண்டனங்களை எல்லாம் மீறி உகாண்டா இந்தச் சட்டத்தை நிறைவேற்றி இருப்பதன் மூலம் மதரீதியாக பழமைவாத கிழக்கு ஆப்பிரிக்கா நாடான உகாண்டா ஓரினை சேர்க்கை உறவை சட்டவிரோதமானதாக ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய சட்டத்தின் மூலம் எல். ஜி .பி .டி.க்யூ  நபர்கள் சட்டத்தை மீறும் பொழுது அவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கிறது  மோசமான ஓரினை சேர்க்கைக்கு மரண தண்டனையை சட்டமாக நிறைவேற்றி உள்ளது .ஹச்.ஐ.வி பாசிடிவ் நபர்கள் குழந்தைகள் அல்லது பிற பாதிக்கக்கூடிய நபர்களை உள்ளடக்கிய ஒரே பாலின உறவுகளுக்கு இந்தச் சட்டம் பொருந்தும் மோசமான ஓரினச்சேர்க்கை முயற்சியில் ஈடுபட்டு குற்றம் சாட்டப்பட்டவருக்கு 14 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம். இந்தச் சட்டத்தின் மூலம் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் உகாண்டா நாட்டினர் ஆயுள் தண்டனைக்கு உரியவராக்கப்படுவர்.அதே நேரம் ஓரினச்சேர்க்கையில் எவரும் ஈடுபட்டால் அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் இந்தச் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும்   நபருக்கு ஆயுள் தண்டனை
 

Tags :

Share via