முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நாளை சந்திப்பு

by Staff / 31-05-2023 12:32:40pm
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நாளை சந்திப்பு

சென்னையில் நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் தங்களுக்கே உள்ளதாக மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது. இந்நிலையில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அரசின் அவசர சட்டத்திற்கு எதிராக, பாஜக ஆளாத மாநில முதலமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரி வருகிறார். அந்த வகையில், நாளை சென்னை வரும் அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து ஆதரவு கோர உள்ளதாக கூறப்படுகிறது.

 

Tags :

Share via