எரிபொருட்கள் உபயோக சிக்கனத்தை வலியுறுத்தி பேரணி நடைபெற்றது.

by Writer / 31-05-2023 11:04:20pm
எரிபொருட்கள் உபயோக சிக்கனத்தை வலியுறுத்தி பேரணி நடைபெற்றது.

-செய்தி:அ.சிவராமலிங்கம்- 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் எரிபொருள் உபயோக சிக்கனத்தை வலியுறுத்தி  விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

தமிழ்நாடு நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் மாநில தலைவர் வெங்கடேஷ்  தலைமையில் கோவில்பட்டி நுகர் பொருள் விநியோகஸ்தர்கள் சங்க  தலைவர் விஜி என்ற ராஜா,பரமேஸ்வரன் பொருளாளர் பாலசுந்தரம்,செயலாளர் அசோக், துணைத் தலைவர் அசோக்குமார், இணைச் செயலாளர் சந்தரக்கண்ணன், ஆலோசர் அழகு லட்சுமணன்,முன்னிலையில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் வனசுந்தர் கலந்து கொண்டு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இப்பேரணி பயணியர் விடுதி முன்பு தொடங்கிய விழிப்புணர்வு பேரணி ரெயில்வே நிலையத்தில் நிறைவு செய்து தீர்மானங்கள் விநியோகஸ்தர்கள் வணிகர்கள் ஒற்றுகை பேம்படுத்துதல்,பரம்பரிய வணிகத்தை காத்தல்,
ஆன்லைன் வர்த்தகத்தை தவிர்த்தல்,நுகர்வோர் தேவையை பூர்த்தி செய்தல், அரசுக்கு வரி வருவாயில் பெரும்பங்கு,நேர்முகம் மற்றும் மறைமுக வேலை வாய்ப்பு. உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றினர்.
இதில் எரிபொருளை அனைவரும் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். அரசின் சாலை விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும், தலைக்கவசம் அணிய வேண்டும், செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்களையும் பொது மக்கள், வணிகர்களுக்கு வழங்கினர். தீர்மானங்கள் பேரணி ஒழுங்கினைப்பாளர்கள் தினகரன், ரவிச்சந்திரன், தினேஷ்பலாஜி, செல்வக்கனி, ஜெபமணி, ஜெயபாஸ்கர், கோபாலகிருஷ்ணன் செல்வராஜன், சந்தனக்குமார், குமரன், பாலமுருகன் இராஜகுரு, கணேஷ்குமார். உள்ளிபட திரளான விநியோகஸ்தர்கள் கலந்து கொண்டனர்.நுகர் பொருள் விநியோகஸ்தர்கள் சங்க கொரவ ஆலோசகர் சீனிவாசன் நன்றி கூறினார்.


 

எரிபொருட்கள் உபயோக சிக்கனத்தை வலியுறுத்தி பேரணி நடைபெற்றது.
 

Tags :

Share via