ஆளுநருக்கு எதிராக முதல்வர் கடிதம்

by Staff / 09-07-2023 03:57:33pm
ஆளுநருக்கு எதிராக முதல்வர் கடிதம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் ஆர்.என்.ரவியைப் பற்றி புகார் கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார். இந்நிலையில், முதல்வர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் அரசுக்கு எதிராக ஆளுநர் செயல்பட்ட நிலையில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு-க்கு இன்று முதல்வர் 15 பக்கத்தில் கடிதம் எழுதியுள்ளார். குறிப்பாக அந்த புகார் கடிதத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக அரசுடன் இருந்து வரும் சுமூகமில்லாத போக்கு, தொடர்ந்து சர்ச்சையாக அரசியல் பேசி வருவதால் ஆளுநர் ரவியை மாற்றக் கோரி குடியரசுத்தலைவருக்கு வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.<br /> &nbsp;
 

Tags :

Share via