விவேக் மறைவு: துணை ஜனாதிபதி,  பிரதமர், முதல்வர், ஸ்டாலின்,  திரையுலகினர் இரங்கல்

by Editor / 17-04-2021 04:58:15pm
விவேக் மறைவு: துணை ஜனாதிபதி,  பிரதமர், முதல்வர், ஸ்டாலின்,  திரையுலகினர் இரங்கல்


 


துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு:
தமிழ் நடிகர் விவேக் மறைவு செய்தி கேட்டு வருத்தமடைந்தேன். அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா :
நடிகர் விவேக் மரணம் பற்றி அறிந்து வேதனையுற்றேன். அவரது நடிப்பின் அற்புதமான திறமை அவரை மிகச்சிறந்த நடிகராக்கியது. தன் திறமையால் இந்திய சினிமாவை சிறப்படைய செய்தவர். அதற்காக எப்போதும் நினைவு கூறப்படுவார்.அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எனது இரங்கல்.
கனிமொழி எம்.:பி.
 திரைப்படங்களில் சமூக பிரச்னைகளை பேசியவர் விவேக்நடிகர் ரஜினிசின்னக் கலைவாணர், சமூக சேவகர், என்னுடைய நெருங்கிய நண்பர் விவேக் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. 

உதயநிதி ஸ்டாலி ன் :
அண்ணன் விவேக் அவர்களின் மரணம் தாங்கிக்கொள்ள முடியாத பேரதிர்ச்சி. கலைஞரின் அன்பை பெற்றவர். தலைவர் அவர்களின் நண்பர். 'மனிதன்' படத்தில் என்னுடன் நடித்தார்-வழிநடத்தினார்.
திரையிலும் நிஜத்திலும் சமூகம்-சூழலியலுக்காக தொடர்ந்து குரல்கொடுத்தவர். அண்ணனின் மரணம் தமிழகத்துக்கு பேரிழப்பு. தன் வாழ்நாள் முழுவதும் நேர்மறை எண்ணங்களையும், உற்சாகத்தையும் விதைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய அண்ணனின் இழப்பை குடும்பத்தார் எப்படி தாங்கிக்கொள்வர்? ஆழ்ந்த இரங்கல். அவரது குடும்பம்-நண்பர்கள்- ரசிகர்களுக்கு என் ஆறுதல். சின்னக்கலைவாணர் விட்டு சென்ற சமூக பணிகளை நாம் தொடருவோம். என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via