முதல்வர் ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும்-அமித் ஷாஆவேசம்.

by Editor / 28-07-2023 10:46:31pm
முதல்வர் ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும்-அமித் ஷாஆவேசம்.

 பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொள்ளும் 'என் மண் என் மக்கள்' தொடங்க விழா ராமநாதபுரத்தில் இன்று நடைபெற்றது.இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய அமித் ஷா,ராமேஸ்வரத்தில் இருந்து தமிழக பாஜகவின் “என் மண் என் மக்கள்” பாதயாத்திரையை கொடியசைத்து துவக்கி வைத்தேன்.
தமிழகத்தின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கும் நிலைநிறுத்துவதற்கும் பிரதமர் நரேந்திரமோடியின்  தலைமையிலான பாஜக உறுதி பூண்டுள்ளது.

 ''திமுக அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர் ஒருவர் கைதாகி உள்ளார், கைதாகி அவர் சிறையில் உள்ள நிலையிலும் அவர் அமைச்சராக இருப்பது ஏன்? செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்காமல் இருப்பதற்கு முதல்வர் ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும்'' ஊழல் மற்றும் வாரிசு அரசியலை வேரோடு அகற்றி, ஏழைகள் மற்றும் வளர்ச்சிக்கு ஆதரவான அரசை அமைப்பதன் மூலம் திமுக ஆட்சி, தமிழகத்தை தவறாக கொண்டு செல்வதிலிருந்து விடுவிக்க வேண்டும் என்ற முழக்கத்தை இந்த நடைபயணம் எழுப்பும்.  மாநிலத்தின் 39 நாடாளுமன்ற மற்றும் 234 சட்டமன்ற தொகுதிகளை ஒட்டிய இந்த யாத்திரை, பிரதமர் நரேந்திர மோடியின் சமூக நீதியின் வழியில் செயல்படுவதை இது எதிரொலிக்கும்.
இந்தப் பாதயாத்திரைக்காகஅண்ணாமலை மற்றும் பாஜகவினர்  குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முதல்வர் ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும்-அமித் ஷாஆவேசம்.
 

Tags : முதல்வர் ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும்-அமித் ஷாஆவேசம்.

Share via